KH 233: "அனல் பறக்குது ஆண்டவரே... அப்போ விவசாயம் கிடையாதா.." KH 233 அப்டேட்... ரசிகர்கள் கேள்வி!
சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் கமல் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.
இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வரும் அவர், விரைவில் இயக்குநர் H வினோத்துடன் இணையவுள்ளார்.
KH 233 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் தற்போது வெளியான KH 233 படத்தின் அப்டேட்டுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

அனல் பறக்குது ஆண்டவரே: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார் கமல். அதில் அவரது 233வது படத்தை H வினோத்தும், 234வது படத்தை மணிரத்னமும் இயக்கவுள்ளனர்.
அதன்படி, Kh 233, KH 234 படங்களின் அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்டன. ஆனாலும், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் KH 233 படத்தின் அப்டேட்டை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், கமல்ஹாசன் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார். ரொம்பவே ப்ரொபஷனலாக கமல் பிராக்டீஸ் செய்து வருவது, KH 233 படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
"Guts & Guns, Training Begins #FuriousAction in #KH233" என்ற ஹேஷ் டேக்குடன் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. இதனையடுத்து KH 233 என்ற ஹேஷ்டேக் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ரசிகர்கள் பலரும் KH 233 படத்தின் கதை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். KH 233 அறிவிப்பு வெளியான போது, இந்தப் படம் விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்பட்டது. அதாவது நம்மாழ்வாரின் பயோபிக் சாயலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், தற்போது வெளியான KH 233 அப்டேட் வீடியோவை பார்க்கும் போது, இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தை போல தரமான சம்பவமாக KH 233 உருவாகுமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், ட்ரெய்னிங் வீடியோவே அனல் பறக்கும் வகையில் இருப்பதாகவும், இந்தப் படமும் விக்ரம் போல ஹிட்டாகுமா எனவும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
அதேநேரம் KH 233 அப்டேட் ஒருபக்கம் இருக்கட்டும், சிம்புவின் STR 48 ஷூட்டிங் எப்போது தொடங்கும் எனவும் ரசிகர்கள் கேட்டுள்ளனர். KH 233 கமல் ஸ்டைல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதனால், விரைவில் KH 233 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











