KH 233: கமல் மீது அதீத நம்பிக்கை... காத்திருந்து ஏமாந்த H வினோத்... KH 233 க்ளைமேக்ஸ் இதுதானா?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான H வினோத், உலகநாயகன் கமல்ஹாசனுடன் KH 233 படத்தில் இணைந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே ட்ராப் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முடிவுக்கு வந்ததா KH 233
விக்ரம் வெற்றிக்குப் பின்னர் வெறித்தனமாக விஸ்வரூபம் எடுத்த கமல்ஹாசன், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை தொடங்கிய கமல், அடுத்தடுத்து கல்கி, மணிரத்னம் கூட்டணி என புதிய ப்ராஜெக்ட்களில் இணைந்தார். அதேபோல், இளம் இயக்குநரான ஹெச் வினோத் இயக்கத்திலும் KH 233 படத்தில் நடிக்க கமிட்டானார்.

இதனால், கமல் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் KH 233 எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. முதல் படமான சதுரங்க வேட்டை மூலம் திரும்பிப் பார்க்க வைத்த ஹெச் வினோத், அடுத்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ஹெச் வினோத்துக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து அஜித்தின் 3 படங்களை இயக்கினார் வினோத்.
அஜித் - வினோத் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களும் வெற்றிப் பெற்றன. அதனடிப்படையில் தான் கமல்ஹாசனின் KH 233 படத்தின் இயக்குநராக கமிட்டானார் ஹெச் வினோத். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளுக்காக ஹெச் வினோத்துக்கு தனியாக ஆபிஸ் ரூம் போட்டுக் கொடுத்திருந்தார் கமல். இதனால் கார்த்தியின் தீரன் அதிகாரம் 2 படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு KH 233 ஸ்க்ரிப்ட்டில் பிஸியானார்.
இதனிடையே மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டானர் கமல். இந்தியன் 2, கல்கி படங்களின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில், இன்னும் இரண்டு படங்களில் கமல் எப்படி நடிக்க முடியும் என கேள்வி எழுந்தது. ஆனால், ஹெச் வினோத் கமல் மீதான அதீத நம்பிக்கையில், KH 233 படத்தை இயக்க காத்திருந்தார். இந்நிலையில், KH 233 படம் ட்ராப் ஆனதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் 2, கல்கி படங்களின் ஷூட்டிங் முடியவே இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது, அதனைத் தொடர்ந்து தக் லைஃப் படத்திலும் நடிக்கவிருப்பதோடு, இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலும் வரவிருக்கிறது. அதனால் தொடர்ந்து பிஸி ஷெட்யூலில் இருக்கும் கமல், ஹெச் வினோத் இயக்கவிருந்த KH 233 படத்தை ட்ராப் செய்துவிடலாம் என முடிவெடுத்துவிட்டாராம். இதனால் ஹெச் வினோத்தும் ஏமாற்றத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தீரன் அதிகாரம் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என ரெடியாகிவிட்டாராம் வினோத். அதற்கு கார்த்தியும் க்ரீன் சிக்னல் கொடுக்க, விரைவில் தீரன் அதிகாரம் 2 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











