KH 233: H வினோத்துக்கு கமல் கொடுத்த கடைசி நம்பிக்கை... மீண்டும் ஆட்டத்துக்குள் வந்த KH 233!
சென்னை: கமலின் 233வது படத்தை H வினோத் இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென KH 233 படம் ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இதனால் விஜய் சேதுபதி, யோகி பாபு நடிக்கும் படத்தை வினோத் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஹெச் வினோத்துக்கு கமல்ஹாசன் கடைசியாக ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் கமல் - ஹெச் வினோத் கூட்டணி..?
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது. தக் லைஃப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தொடர்ந்து தக் லைஃப் படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல்.

இதனிடையே கமல் நடித்துள்ள இந்தியன் 2, கல்கி படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியிருந்தார் கமல்ஹாசன். கமலின் 233வது படமான இதுவும் ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் உருவாகவிருந்தது.
சதுரங்க வேட்டை மூலம் இயக்குநராக அறிமுகமான H வினோத், முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அடுத்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை இயக்கினார். இதனால் ஹெச் வினோத் மேக்கிங்கில் இம்ப்ரஸ் ஆன கமல் தனது KH 233 படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
மேலும் KH 233 ஸ்க்ரிப்ட், ப்ரீ புரடக்ஷன் வேலைகளை கவனிக்க தனியாக ஆஃபிஸும் போட்டுக் கொடுத்திருந்தார் உலக நாயகன். இந்த நிலையில் தான் KH 233 திடீரென ட்ராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. கமலின் கால்ஷீட் பிரச்சினை என்றும் ஹெச் வினோத்தின் கதை அவருக்குப் பிடிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டன. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி KH 233 இன்னும் ட்ராப் ஆகவில்லை எனத் தெரிகிறது.
அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கும் KH 237 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனால் KH 237 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதே, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவும் கமல் பிளான் செய்துள்ளாராம். அதற்கு முன்பாகவே தக் லைஃப் ஷூட்டிங் வேகமாக முடிந்துவிடும் என தெரிய வந்துள்ளது. இதனால் ஹெச் வினோத் இயக்கவிருந்த சில படங்கள் தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











