KH 233: அது என்ன Rise To Rule... அப்ப இதுதான் KH 233 கதையா..? கமல் கனவு பலிக்குமா?

சென்னை: கமல்ஹாசனின் KH 233 படத்தை H வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக உருவாகும் இப்படத்தின் அபிஸியல் அப்டேட் நேற்று வெளியானது.

இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே படங்களில் நடித்து வரும் கமல், விரைவில் KH 233 படத்தில் இணையவுள்ளார்.

KH 233 ப்ரோமோவில் இடம்பெற்ற Rise To Rule என்ற கேப்ஷன் குறித்தும், இப்படத்தின் கதை பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

 KH 233: Kamal Haasans KH233 is expected to be a political film

கமல் கனவு பலிக்குமா?:விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார் கமல்ஹாசன். நீண்ட இடைவேளுக்குப் பிறகு உலக நாயகன் கமல் கொடுத்த ரீ-என்ட்ரியால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் கமல். இன்னொருபக்கம் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணையவுள்ளனர். கமலின் 234வது படமாக இது உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வந்த உலகநாயகன், நேற்றும் ஒரு அதிரடி அப்டேட்டை வெளியிட்டார்.

அதில் கமலின் 233வது படத்தை H வினோத் இயக்குவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. KH 233 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. கையில் தீப்பந்தத்துடன் Rise To Rule என்ற கேப்ஷனுடன் மிரட்டலாக மாஸ் காட்டினார் உலக நாயகன். இதில் முக்கியமாக Rise To Rule என்ற கேப்ஷனும், கமல் கையில் இருக்கும் தீப்பந்தமும் குறியீடாக என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக இந்தப் படம் விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது Rise To Rule என்ற கேப்ஷன், ப்ரோமோ வீடியோ அனைத்துமே கமலின் அரசியல் அதிரடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் கதையை கமல்ஹாசனும் H வினோத்தும் இணைந்து எழுதியுள்ளார்களாம். இதனால் KH 233 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக உருவாகும் KH 233 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் விஜய் சேதுபதி தான் ஹீரோ என்றும், கமல் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இதில் கமல்ஹாசன் தான் ஹீரோ என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், KH 233 படத்தின் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் பல கோடிகளில் நடந்து முடிந்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X