KH 233: தலைவன் இருக்கிறான் கம்பேக்... H வினோத்தை குழப்பிய கமல்... ஆரம்பமே இப்படியா?
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே படங்களில் நடித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக அவரது 233, 234வது படங்களின் இயக்குநர்கள் பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இதில் கமலின் KH 233 படத்தை H வினோத் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதை குறித்து ஏராளமான தகவல்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது இன்னொரு புதிய அப்டேட்டும் கிடைத்துள்ளது.
KH 233 கதை குழப்பத்தில் H வினோத்:விக்ரம் படத்தின் வெற்றியால் உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் உற்சாகமாக நடித்து வருகிறார். இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே என இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்தடுத்து மேலும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். அதன்படி கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். அதற்கு முன்னதாக 233வது படத்தை H வினோத் இயக்கவுள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. ஆனாலும் இந்தப் படத்தின் கதை குறித்து இன்னும் பெரும் குழப்பம் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. KH 233 படத்தில் முதலில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிப்பதாகவும், கமல் கேமியோ கேரக்டரில் வந்துபோவார் என்றும் சொல்லப்பட்டது. அதுவும் உதயநிதி நடிக்கவிருந்த படத்தில் தான் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கமல் பிளான் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேபோல் இந்தப் படம் விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாக உள்ளதாகவும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அல்லது நெல் ஜெயராமன் ஆகியோரில் ஒருவரின் பயோ பிக் படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல்கள் உண்மையில்லை என இயக்குநர் ஹெச் வினோத் மறுப்புத் தெரிவித்திருந்தார். மேலும், கமலிடம் இருக்கும் 3 கதைகளில் ஒன்றை படமாக எடுக்கவிருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், அந்த மூன்று கதைகள் எதுவென்று ஹெச் வினோத் கூறாமல் தவிர்த்தார். அதற்கான காரணம் அவருக்கே இன்னும் கதை எது என்பது உறுதியாக தெரியவில்லை என சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னர் ஏஆர் ரஹ்மான் உடன் இணைந்து தலைவன் இருக்கிறான் என்ற படத்தை தொடங்கினார் கமல்ஹாசன். அரசியல் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் செம்ம பவர்ஃபுல் ஸ்டோரி என்றும் கூறப்பட்டது.
தற்போது அந்த கதையை படமாக எடுக்கலாம் என ஹெச் வினோத்திடம் கூறியுள்ளாராம் கமல். ஏற்கனவே பல கதைகளை ரெடி செய்துவிட்டு, கடைசியில் ரிஜக்ட்டான நிலையில் தற்போது தலைவன் இருக்கிறான் படத்தை தூசு தட்டியுள்ளார் உலகநாயகன். இந்த கதையிலும் திடீரென மாற்றம் வருமா அல்லது டேக் ஆஃப் ஆகிவிடுமா என்பது ஹெச் வினோத்துக்கே குழப்பமாக இருக்கிறதாம். அதேநேரம் தலைவன் இருக்கிறான் ஓக்கே ஆகிவிட்டால் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாரா அல்லது வேறு இசையமைப்பாளர் கமிட் ஆவாரா என்பதும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











