KH 233: லால் சலாம் ஸ்டைலில் உருவாகும் KH 233... ஹீரோ கமல்ஹாசன் இல்லையாமே... அந்த நடிகராம்!

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் கமல்ஹாசன்.

ஷங்கரின் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் KH 234 படங்களில் பிஸியாகிவிட்டார்.

அதேபோல், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் கமல் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் KH 233 படம் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 KH 233: KH 233 replaces Kamal Haasan with Vijay Sethupathi as the hero

லால் சலாம் ஸ்டைலில் கமலின் KH 233: கடந்த சில வருடங்களாக அரசியல் பக்கம் பிஸியாக இருந்த கமல்ஹாசன், தற்போது சினிமாவிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அதிலிருந்து திரையுலகில் மீண்டும் ராஜநடை போட்டு வருகிறார் கமல்.

இதனால் கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை தூசு தட்டிய கமல், அடுத்து மணிரத்னம் இயக்கும் KH 234 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததும் KH 234 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே H வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் கமல். KH 233 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படம் குறுகிய காலத்தில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல் - ஹெச் வினோத் இணையும் KH 233 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, சிம்புவின் எஸ்டிஆர் 48 படங்களையும் ராஜ்கமல் சார்பில் கமல் தயாரித்து வருகிறார். இந்நிலையில், KH 233 ஷூட்டிங் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபக்கம் மணிரத்னம் இயக்கும் KH 234, இன்னொருபக்கம் KH 233 படப்பிடிப்பு எப்படி சாத்தியமாகும் என கேள்விகள் எழுந்தன.

 KH 233: KH 233 replaces Kamal Haasan with Vijay Sethupathi as the hero

தற்போது அதற்கு விஜய் சேதுபதி மூலம் பதில்கள் கிடைத்துள்ளன. KH 233 படத்தில் விஜய் சேதுபதியும் கமிட் ஆகியுள்ளதாகவும், அவர்தான் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், விஜய் சேதுபதி தான் KH 233 ஹீரோ என்றும், கமல் கேமியோ ரோலில் தான் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கமல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. லால் சலாம் படத்தில் ரஜினியும் கேமியோ ரோலில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ள KH 233 படத்தில் மறைந்த மாமேதை நம்மாழ்வார் போன்ற ஒரு பாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. அதனால் தான் கமல்ஹாசனும் இப்படத்தை தயாரிக்கவும் அதில் கேமியோ ரோலில் நடிக்கவும் ஓக்கே கூறியுள்ளாராம். முன்னதாக பாரம்பரிய நெல் பாதுகாப்பு அமைப்பினரின் சந்திப்பின்போது, இயக்குநர் எச். வினோத்தும் கமல்ஹாசன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், இயற்கை விவசாயம் என பல சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்குகிறார் ஹெச் வினோத். மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்தை ரொம்பவே பாராட்டியிருந்தார் வினோத். அதன் தாக்கத்தில் தான் அவர் இந்தப் படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரம் KH 233 படத்தில் கமல் கேமியோ ரோலில் நடிப்பதால், விரைவில் மணிரத்னம் இயக்கும் படத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X