KH 234: கமலுக்காக ஆக்‌ஷன் மோடில் மாறிய மணிரத்னம்... KH 234 டீசரில் அன்பறிவ் மாஸ்டர்ஸ் சம்பவம் ரெடி!


சென்னை: கமல் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் KH 234 திரைப்படம் உருவாகி வருகிறது.

நாயகனுக்குப் பின்னர் கமல், மணிரத்னம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் டீசர் கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், KH 234 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் லீக்காகி, இந்தப் படத்தின் டீசர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

KH 234: Kamal Hassans KH 234 shooting spot photos trending now

ட்ரெண்டாகும் KH 234 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் தயாராகி வருகின்றன. இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துவிட்ட கமல், அடுத்து மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார். அதில் KH 233 படத்தை H வினோத்தும், KH 234 படத்தை மணிரத்னமும் இயக்குகின்றனர். இதனால் கமல் ரசிகர்கள் செம்ம வைபில் உள்ளனர்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் KH 234 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். கடந்தாண்டே KH 234 அபிஸியல் அப்டேட் வெளியானாலும், ஷூட்டிங் இதுவரை தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு KH 234 டீசருடன், படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, வரும் 6ம் தேதி KH 234 டீசர் வெளியாகிறது.


இந்த டீசர் செம்ம ஆக்‌ஷன் மோடில் இருக்கும் என கன்ஃபார்ம் ஆகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் KH 234 படத்தின் டெக்னிக்கல் டீமை படக்குழு அபிஸியலாக அறிவித்தது. அதில் சண்டைப் பயிற்சி இயக்குநராக அன்பறிவ் ப்ரதர்ஸ் இணைந்துள்ளனர். கேஜிஎஃப், விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற படங்கள் மூலம் ஆக்‌ஷன் ட்ரீட் கொடுத்த இந்த இரட்டையர்கள், முதன்முறையாக மணிரத்னம் உடன் இணைந்துள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் KH 234 டீசர் முழுக்க ஆக்‌ஷனில் மிரட்டலாக உருவாகி வருகிறதாம். இதற்காக மணிரத்னம் - அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆகியோருடன் கமல்ஹாசனும் ஷூட்டிங்கில் இணைந்தார். செம்ம தெறி மாஸ்ஸாக உருவாகியுள்ள இந்த டீசர், கமல்ஹாசன் ரசிகர்களுக்கு தாறுமாறான ஆக்‌ஷன் ட்ரீட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த டீசர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரலாகி வருகிறது.

KH 234: Kamal Hassans KH 234 shooting spot photos trending now

அதில், அன்பறிவ் மாஸ்டர் இருவருடனும் இயக்குநர் மணிரத்னமும் உள்ளார். ரொம்பவே சீரியஸ்ஸான டிஸ்கஷன் செய்யும் மூவரும், கமலுக்கு சரியான சம்பவம் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X