KH 234: கேங்ஸ்டர் மோடுக்கு மாறும் கமல்... KH 234ல் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘நாயகன்’ வேலு நாயக்கர்..?
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தனது 233, 234வது படங்களில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.
இதில் கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்துள்ள நிலையில், படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

KH 234ல் ரீ-என்ட்ரி கொடுக்கும் வேலு நாயக்கர்..?: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. அதேபோல், பிரபாஸின் கல்கி படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் கமல்ஹாசன். ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் கமல், தொடர்ந்து மேலும் 2 படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 234வது படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் மணிரத்னம் இயக்கும் KH 234 படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. வேலு நாயக்கர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் கமல் மிரட்டலாக நடித்திருந்தார்.
கமலுடன் சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நாசர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஹாலிவுட் படமான காட்ஃபாதரின் தமிழ் வெர்ஷனாக நாயகனை ரசிகர்கள் கொண்டாடினர். மணிரத்னத்தின் மேக்கிங், இளையராஜாவின் இசை, கமலின் நடிப்பு என அனைத்துமே நாயகன் படத்தை, இப்போதும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. நாயகனுக்குப் பின்னர் இணையாத கமல் - மணிரத்னம் கூட்டணி, மீண்டும் KH 234 படத்தில் இணையவுள்ளது.
சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் கமல் - மணிரத்னம் காம்போ மீண்டும் இணைந்துள்ளதால், KH 234 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விக்ரம், பொன்னியின் செல்வன் போல, மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகவுள்ளது KH 234. அதுமட்டும் இல்லாமல் நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக KH 234 உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
நாயகன் வேலு நாயக்கர் KH 234 படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தால், வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரின் கேரக்டர்களும் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் KH 234 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ள மணிரத்னம், விரைவில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











