KH 234: கமலின் KH 234 டீசர் ரிலீஸில் திடீர் மாற்றம்... AR ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!
சென்னை: கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார்.
36 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்துள்ள இந்த 'நாயகன்' கூட்டணியில், இளையராஜாவுக்குப் பதிலாக ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளார்.
இதன்மூலம் கமல், மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், KH 234 படத்தின் டீசர் பற்றி ஏஆர் ரஹ்மான் சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

KH 234 டீசர் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்திவரும் கமல், அடுத்தடுத்து மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார். அதில் KH 233 படத்தை H வினோத் இயக்கவுள்ளார். அதேபோல், KH 234 படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் 6ம் தேதி வெளியானது. கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த அப்டேட் வெளியான போதும், இதுவரை படப்பிடிப்புத் தொடங்கவில்லை. பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் மணிரத்னம் பிஸியாக இருந்தார். அதேபோல், கமலும் இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வந்தார். இதனால், KH 234 பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், இந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 டீசர் வெளியாகும் என உலகநாயகன் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து KH 234 பூஜை வீடியோவும் வெளியானது. இதில், KH 234 படத்தில் இணையும் டெக்னீஷியன்கள் பற்றிய அப்டேட் வெளியானது. KH 234 டீசர் சொன்னபடி கமல் பிறந்தநாள் தினத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், ஒருநாள் முன்னதாக நவ. 6ம் தேதியே வெளியாகும் என ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், மணிரத்னம், கமல் கூட்டணியில் இணைவது பெருமையாக உள்ளதாகவும், இந்தப் படத்தின் எக்ஸ்க்ளூஸிவான அப்டேட்ஸ் கமல் பிறந்தநாள் தினத்தில் வெளியாகும் எனவும் சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் KH 234 படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் இந்தியன் 2 அப்டேட்டும் கமல் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.
அதன்படி இந்தியன் 2 அப்டேட் நவம்பர் 3ம் தேதி முதலே வெளியாகவுள்ளது. இந்தியன் 2 இன்ட்ரோ என்ற பெயரில் வெளியாகும் இந்த அப்டேட்டில் கமலின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது ப்ரொமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் இந்தியன் 2, இன்னொரு பக்கம் KH 234 என, நவம்பர் முதல் வாரம் கமல் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் இருப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications