KH 234: KH 234 டீசர் ரெடி... ஸ்டைலிஷாக அப்டேட் கொடுத்த கமல், மணிரத்னம்... ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல்.

KH 234 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் குறித்து கமல் அப்டேட் கொடுத்திருந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

 KH 234: KH 234 Teaser update released with Kamal and Mani Ratnam Smiling photo

கமல், மணிரத்னம் கொடுத்த KH 234 அப்டேட்
கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் பல ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல். 1996ல் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாகவும் இது உருவாகியுள்ளது. அதேபோல், சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைகிறார் கமல்ஹாசன்.

தமிழில் வெளியான கிளாஸிக் திரைப்படமான நாயகனுக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதுபற்றிய அப்டேட் கடந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அப்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருந்தார் மணிரத்னம். அதேபோல், கமல்ஹாசனும் இந்தியன் 2, கல்கி படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது KH 234 படத்தை தொடங்க கமலும் மணிரத்னமும் முடிவு செய்துவிட்டனர். அதற்கான முதற்கட்ட ஷூட்டிங் இந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதுபற்றி கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதாவது அடுத்த மாதம் 7ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, KH 234 டீசர் வெளியாகும் எனக் கூறியிருந்தார். அதற்கான ஷூட்டிங் நடைபெறவிருப்பதையும் கமல் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது KH 234 டீசருக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தெரிகிறது. இதுபற்றி ராஜ்கமல் பிலிம்ஸ் தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளது. அதில் KH 234 என்ற போர்ட் பின்னணியில் கமல்ஹாசனும் மணிரத்னமும் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. மேலும், இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள், இனி கொண்டாட்டம் தான் என கேப்ஷனும் கொடுத்துள்ளது. இதன் மூலம் KH 234 டீசர் ரெடியாகிவிட்டது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணையும் KH 234, ரசிகர்களுக்கான ஃபேன்பாய் சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இது நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருந்தால் இன்னும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். நவம்பர் 7ம் தேதி வெளியாகும் டீசரில் KH 234 படம் பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X