KH 234: KH 234-ல் இணைந்த பிரபலத்தின் வாரிசு..? கமல், மணிரத்னம் நடுவில் யாருன்னு கவனிச்சீங்களா?

சென்னை: கமல் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ளது.

கமலின் 234வது படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தற்காலிகமாக KH 234 என்ற டைட்டில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை வீடியோ தற்போது வெளியானது.

இதில் KH 234 படத்தின் டெக்னீஷியன்கள் பற்றிய அப்டேட் வெளியான நிலையில், பிரபலத்தின் வாரிசு ஒருவரும் இணைந்துள்ளது எதிர்பார்க்க வைத்துள்ளது.

 KH 234: Khushboos daughter has joined Kamal and Mani Ratnams KH 234

KH 234-ல் இணைந்த பிரபலத்தின் வாரிசு..?
கமல்ஹாசனின் ஆரம்ப காலத்தில் கிளாஸிக் ஹிட் கொடுத்த திரைப்படம் நாயகன். மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து 1987ம் ஆண்டு வெளியான நாயகன், தமிழ் சினிமாவின் 'காட்ஃபாதர்' என கொண்டாடப்படுவதுண்டு. அதன்பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்ததே இல்லை. இந்நிலையில், கடந்தாண்டு கமல் - மணிரத்னம் இணைவது கன்ஃபார்ம் ஆனது.

பொன்னியின் செல்வன் படங்களில் பிஸியாக இருந்த மணிரத்னம், கமலுடன் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் கன்ஃபாம் ஆகவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் KH 234 படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை மட்டுமே கடந்தாண்டு அப்டேட் வெளியானது.

அதனைத் தொடர்ந்து வரும் 7ம் தேதி, தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 ப்ரொமோ டீசர் வெளியாகும் என கமல் அறிவித்திருந்தார். அதனையடுத்து கமல் - மணிரத்னம் இருவரது போட்டோ நேற்று வெளியானது. அதன் தொடர்ச்சியாக KH 234 பூஜை வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், கமல்ஹாசன், மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், அன்பறிவ் மாஸ்டர், சினிமோட்டோகிராபர் ரவி கே சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்தமாக KH 234 படத்தின் டெக்னிக்கல் டீம் பற்றிய அப்டேட்டாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கமலின் நெருங்கிய நண்பர் ஒருவரின் வாரிசு கலந்துகொண்டுள்ளார். கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், சிங்கார வேலன் ஆகிய படங்களில் நடித்திருந்த குஷ்பூவின் மகள் தான் அவர். கமலுடன் இரண்டே படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தார் குஷ்பூ.

 KH 234: Khushboos daughter has joined Kamal and Mani Ratnams KH 234

இந்நிலையில், அவரது மகள் அவந்திகா KH 234 பூஜை வீடியோவில் கமல், மணிரத்னம் இருவருக்கும் நடுவில் செம்ம மஸ்ஸாக நிற்கிறார் அவர். அவந்திகாவுடன் மேலும் இருவரும் கமல், மணிரத்னம் உடன் போட்டோ எடுத்துள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள், குஷ்பூவின் மகள் கமல்ஹாசனனுடன் நடிக்கிறாரா எனக் கமெண்ட்ஸில் கேட்டு வந்தனர். ஆனால், அவர் KH 234 படத்தில் நடிக்கவில்லை என்றும், ஃபேஷன் டிசைனிங் அல்லது வேறு எதாவது டெக்னிக்கல் டீமில் இடம் பிடித்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X