KH 234: வாவ்! கமல்-மணிரத்னம் கூட்டணியில் சிம்பு..? KH 234 படத்தில் இப்படியொரு கேரக்டரா..?

சென்னை: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதத்துடன் நிறைவுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

இந்தப் படத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 KH 234: Simbu Is Expected To Play A Crucial Role In Kamal Haasan 234th Film

கமல்-மணிரத்னம் கூட்டணியில் சிம்பு:விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2வில் நடித்து வருகிறார் கமல். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்தாண்டு கமல் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, கமலின் 234வது படமாக உருவாகும் இதனை மணிரத்னம் இயக்கவுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக KH 234 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கமல் - மணிரத்னம் கூட்டணியில் தற்போதைக்கு ஏஆர் ரஹ்மான் மட்டுமே இணைந்துள்ளார். கமல் ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், நயன்தாரா, த்ரிஷா என சொல்லப்பட்ட நிலையில், வித்யா பாலன் தான் கமல் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இன்னொரு முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, KH 234 படத்தில் கமலுடன் சிம்புவும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருந்தார். அதன்பின்னர் KH 234 படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக தெரிகிறது. அதேபோல், சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் கமல் தயாரிப்பில் STR 48, இன்னொரு பக்கம் கமலுடன் KH 234 என மாஸ் காட்டவுள்ளார் சிம்பு. ஒரே நேரத்தில் கமல் கூட்டணியில் இரண்டு படங்களில் சிம்பு நடிக்கவுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் படத்தின் ரீமேக் அல்லது அவரது ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்பட்டார் சிம்பு.

 KH 234: Simbu Is Expected To Play A Crucial Role In Kamal Haasan 234th Film

ஆனால், அப்போது தன்னுடன் ஒரு படத்தில் நடிக்கலாம் வாங்க என கமல் அழைப்புக் கொடுத்திருந்தார். அது தற்போது உண்மையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. KH 234 படத்தில் சிம்புவுக்கு செம்ம மாஸ்ஸான கேரக்டர் எனவும், இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், KH 234 படத்தில் சிம்பு நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், தமிழ்த் திரையுலகில் ஒரு மைல்ஸ்டோனாக கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி இணையவே இல்லை. இந்தச் சூழலில் யாருமே எதிர்பாராத நேரத்தில் KH 234 பட அறிவிப்பு வெளியானதுடன், அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. KH 234 ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும், சிம்பு போர்ஷன் செப்டம்பரில் நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X