KH 234 Title: கமல்ஹாசனின் KH 234 டைட்டில்... மேக்கிங் வீடியோவுடன் வெளியான செம்ம மாஸ் அப்டேட்!

சென்னை: வரும் 7ம் தேதி கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களில் இருந்து அப்டேட்கள் வெளியாகவுள்ளன.

அதன் ஒருபகுதியாக கமல் - மணிரத்னம் இணையும் KH 234 படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது KH 234 அப்டேட் பற்றிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளனர்.

 KH 234 Title: Kamal Haasans KH 234 title teaser will be released tomorrow at 5 PM

KH 234 டைட்டில் டீசர்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கவுள்ள திரைப்படம் KH 234. 1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்துக்குப் பின்னர், கமல் - மணிரத்னம் கூட்டணி KH 234-ல் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஏஆர் ரஹ்மானும் இணைந்துள்ளார். இதனால், KH 234 பற்றிய அப்டேட் வெளியானது முதலே இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளன. கமல் பிறந்தநாளை முன்னிட்டு கடந்தாண்டு நவம்பர் 6ம் தேதி KH 234 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானது. ஆனாலும், அதன் பின்னர் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது KH 234 படப்பிடிப்பை தொடங்க கமல்ஹாசனும் மணிரத்னமும் ரெடியாகிவிட்டனர்.

அதன்படி, முதலில் KH 234 டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. முன்னதாக KH 234 பூஜை வீடியோவுடன், படத்தின் டெக்னிக்கல் டீம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து நாளை வெளியாகவுள்ள KH 234 அப்டேட் பற்றிய செம்ம மாஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது KH 234 டீசர் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

 KH 234 Title: Kamal Haasans KH 234 title teaser will be released tomorrow at 5 PM

அதன்படி, நாளை மாலை 5 மணிக்கு KH 234 படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த டைட்டில் டீசர் ஆக்‌ஷன் மோடில் இருக்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் மணிரத்னம், அன்பறிவ் மாஸ்டர்ஸ் இருக்கும் புகைப்படங்களும், கமல் - மணிரத்னம் இருவரும் டிஸ்கஷன் செய்யும் போட்டோவும் வெளியாகியிருந்தன.

கமல் - மணிரத்னம் காம்போ 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைவதால், KH 234 நாயகன் இரண்டாம் பாகமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான விடை நாளை மாலை 5 மணிக்கு தெரியவரும் என்பதால் ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X