'தக் லைஃப்': மிரட்டலாக வெளியானது KH 234 டைட்டில் டீசர்... Thug Life கொடுத்த கமல், மணிரத்னம் காம்போ
சென்னை: கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார்.
இதுவரை KH 234 என்ற டைட்டிலில் இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது KH 234 படத்தின் டைட்டிலை படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.
அதன்படி, KH 234 திரைப்படத்துக்கு Thug Life என டைட்டிலுடன் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியானது KH 234 டைட்டில் டீசர்
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம், கடந்தாண்டு வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியால் உற்சாகமான கமல், மீண்டும் புதிய படங்களில் கமிட்டானார். இன்னொருபக்கம் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் நடிக்கும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் மணிரத்னம் உடன் கமல் இணைவதாக கடந்தாண்டு நவம்பர் 6ம் தேதி அப்டேட் வெளியானது.
நாயகன் படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர், கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் காட்ஃபாதர் என நாயகன் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர். கமல், மணிரத்னம், இளையராஜா கூட்டணியில் கிளாஸிக்கல் மூவியாக நாயகன் உருவாகியிருந்தது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இணையும் கமல் - மணிரத்னம் காம்போ, இந்த முறையும் மாஸ் காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனிடையே கடந்த சில தினங்களாக KH 234 அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு KH 234 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது KH 234 டைட்டில், அட்டகாசமான டீசருடன் வெளியாகியுள்ளது. Thug Life என்ற டைட்டிலும் மிரட்டலான டீசரும் வெளியாகி, ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.
இந்த டீசரில், "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்" என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டியுள்ளர் கமல்ஹாசன். ஏஆர் ரஹ்மானின் மிரட்டலான பிஜிஎம், மணிரத்னத்தின் மேக்கிங், அன்பறிவ் மாஸ்டர்ஸின் அட்டகாசமான ஆக்ஷன் ட்ரீட் என மஜாவாக உருவாகியுள்ளது Thug Life டீசர். இதன்மூலம் Thug Life கேங்ஸ்டர் மூவி என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
அதேபோல் தேவர் மகன் படத்தில் கமல்ஹாசனின் கேரக்டரான சக்திவேல், நாயகன் படத்தின் நாயக்கர் ஆகிய பெயர்களை Thug Lifeல் கமல் கேரக்டருக்கு வைத்திருப்பது செம்ம ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது. கமல் பேசுவதும் நெல்லை வட்டார வழக்கு மொழியில் இருப்பதால், படத்தில் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கிறது. இந்தப் படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











