KH X RK Promo : ரூ. 1000 கோடி லோடிங்.. காலரை தூக்கி விடும் ரஜினி கமல் ரசிகர்கள்.. சாதனை படைக்கிறாரா இன்பநிதி?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் இரண்டு இமயங்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியானதுமே மொத்த திரையுலகமும் பரபரப்பாக பேசத் தொடங்கி விட்டது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள், அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். அதேபோல் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ப்ரோமோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் கமல் மற்றும் ரஜினி என இருவரையும் ஒரே பிரேமுக்குள் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இத்தனை ஆண்டுகள் காத்திருப்புக்கு தரமான சம்பவத்தை செய்த நெல்சனுக்கு நன்றி என்று எல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
ப்ரோமோவின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை காமெடியாகவும் அதே நேரத்தில் கமல் மற்றும் ரஜினி போர்ஷனில் செம மாஸாகவும் உருவாக்கி உள்ளார் நெல்சன். இவர்கள் இருவரது லுக், ஹேர் ஸ்டைல், ஆட்டிடியூட்,கெட்டப், டிரஸ் என எல்லாமே வின்டேஜ் ஸ்டைலில் இருப்பதால் கௌபாய் காலத்து ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக இருக்குமோ என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

நெல்சன்: ப்ரோமோ ரிலீஸ் ஆவதற்கு முன்னர் ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த படத்தின் ப்ரோமோவுக்காக தனி ஸ்கிரிப்ட் தயார் செய்து அதை படமாக்கி உள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இதற்காக மெக்கானிக் ஷெட் போல ஒரு செட்டும், நட்சத்திர ஹோட்டல் போல ஒரு செட்டும் போட்டுள்ளார்கள். அதில் தான் படமாக்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது. அதேபோல் படத்தின் ப்ரோமோவில் மெக்கானிக் ஷெட் மற்றும் ஹோட்டல் என இரண்டுமே இடம் பெற்றுள்ளது. ரஜினி மற்றும் கமல் என இருவருமே ஹோட்டலில் இருந்து பக்காவாக ரெடி ஆகி, மெக்கானிக் ஷெட்டுக்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்கள்.
Born Cool. Built Retro. Eternal Swag. 😎#KHxRK Tamil Promo
— Red Giant Movies (@RedGiantMovies_) February 21, 2026
▶️ https://t.co/9rRSNvssoJ@ikamalhaasan @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @DirRajivMenon @Nirmalcuts @KiranDrk #PallaviSingh @amritharam2 @valentino_suren @alagiakoothan @MShenbagamoort3 @arjundurai… pic.twitter.com/qlUHR3FYrC
மாஸான ப்ரோமோ: இருவருமே எதிர் எதிர் அறையில் இருந்து வெளியேறி சந்தித்துக் கொண்டு, அதன் பின்னர் ஒன்றாக நடந்து செல்லும் காட்சி, தன்னிடம் இருக்கும் கார் சாவியை தூக்கி கமலிடம் வீசுகிறார் ரஜினி. அதன் பின்னர் இருவரும் காருக்குள் அமர்கிறார்கள். ப்ரோமோவில் கடைசியில் யார் ஹீரோ என்று கமல் நெல்சனை நோக்கி கேட்கிறார். ஆனால் அந்த கேள்விக்கு பதிலே இல்லாமல் ப்ரோமோ முடிகிறது.

1000 கோடி: ப்ரோமோவில் இன்னும் மாஸான காட்சிகளை வைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வந்தாலும், பலரும் ப்ரோமோ நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். குறிப்பாக, தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் உறுதி. அந்த சாதனையை இந்த படம் படைக்கும் என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் சிலறைப் போல இன்றைக்கு கெத்தானவர்கள் இல்லை நாங்கள், கடந்த 50 ஆண்டுகளாகவே கெத்து தான் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications