KH X RK: யாரு பூரி.. யாரு கிழங்கு.. சந்தானம் காமெடியை சுட்ட நெல்சன்.. KH X RK Promo பரிதாபங்கள்!
சென்னை: 47 ஆண்டுகளுக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் இரண்டு இமயங்கள் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது மட்டும் இல்லாமல், இந்த படத்தை முதலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது என்று தகவல்கள் வெளியானது. ஆனால் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படமான கூலி படம் சரியாக போகாததால், ரஜினி மற்றும் கமல் என இருவரையும் வைத்து இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு போனது என்று பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது.
இப்படி இருக்கையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ப்ரோமோ நன்றாக உள்ளது. இருவரது கெட்டப்பும் நன்றாக உள்ளது. படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆவல் இப்போதே ஏற்பட்டுவிட்டது என்று எல்லாம் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் மறுபுறம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படம் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்: இப்படி இருக்கையில் ப்ரோமோவில் வெளிநாட்டுப் பெண்கள் வருவது போன்று காண்பிக்கப்படுகிறது. அதைப் பார்த்த சிலர் ரஜினி கமலை விட இவர்கள் தான் செம்மையாக இருக்கிறார்கள் என்று கமெண்ட் போட, அந்த பெண்கள் எல்லாம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவர்கள் என்று பதில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
சந்தானம் பட காமெடி: ப்ரோமோவில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயமே அவர்களின் லுக், அதை அடுத்து ப்ரோமோவின் கடைசியில் கமல்ஹாசன் நெல்சனை நோக்கி, " யாரு ஹீரோ" என்று கேள்வி கேட்க, அதற்கு ரஜினியோ நெல்சனை நோக்கி, " கேட்கறாங்கல்ல சொல்லுங்க ஜி யாரு ஹீரோ?" என்று கூறுகிறார். ப்ரோமோவின் இந்த பார்ட் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வரும் காமெடி காட்சியைப் போல இருப்பதால் இணையவாசிகள் பலரும் இந்த காமெடி காட்சியையும் இந்த ப்ரோமோ கட்-ஐயும் பகிர்ந்து நெல்சன் சந்தானத்தின் காமெடியில் இருந்து சுட்டு விட்டார் போலயே என்று பகிர்ந்து வருகிறார்கள்.

வடக்குப்பட்டி ராமசாமி: சந்தானம் பட காமெடியில் ஜான் விஜய் மற்றும் ரவி மரியா இருவரையும் நோக்கி, லொள்ளு சபா மாறன், " பாம்பும் கீரியுமாக இருந்த நீங்க, இப்போது பூரியும் கிழங்குமா ஆகிட்டீங்க" என்று கூறுவார். இதையடுத்து, அதெல்லாம் சரி இதுல யாரு பூரி? யாரு கிழங்கு? என்று கேட்டு புது பிரச்னையை உருவாக்குவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காமெடி. இத்தனைக்கும் இந்த காமெடியும் காருக்குள் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ரஜினி கமல் பட ப்ரோமோவின் கடைசியும் காருக்குள் தான் இருக்கும். காருக்குள் தான் யார் ஹீரோ என்ற கேள்வியை கமல் கேட்பார். இதனால் எல்லாமும் பக்காவாக பொருந்திப் போகிறதே என்று இணையவாசிகள் இயக்குநர் நெல்சனை கலாய்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications