KH234: என்ன பொன்னியின் செல்வன் டீமில் கமலும் துல்கரும் சேர்ந்துட்டாங்களா.. செம லிஸ்ட்டா இருக்கே!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள KH234 படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தியது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் சற்றே பின்னடைவை சந்தித்து 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

பொன்னியின் செல்வன் டீம்: மணிரத்தினம் இயக்கிய வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வன் படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்த, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் கமல்ஹாசனின் 234 வது படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் படிக்கப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொன்னியின் செல்வன் படத்திற்கு கமல்ஹாசன் குரல் கொடுத்து இருந்த நிலையில் கூடுதலாக இந்த படத்தில் துல்கர் சல்மான் மட்டுமே புதிய வரவா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமாக ரெடியாகும் KH234: இனிமேல் கோலிவுட்டில் இது போன்ற மல்டி ஸ்டார் படங்கள் தான் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்கிற நிலையும் தெளிவாக உள்ளதாக கூறுகின்றனர். KH233 படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ள நிலையில் சமீபத்தில் அதற்கான பயிற்சி வீடியோ ஒன்றையும் கமல் வெளியிட்டு இருந்தார். நிஜ துப்பாக்கிகளை வைத்து கன் ஷூட்டிங் பயிற்சி செய்யும் கமல்ஹாசன் வீடியோவை பார்த்து கோலிவுட்டே மிரண்டு போய்விட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் 234 வது படத்தின் அப்டேட்களும் வெளியாகி உலகநாயகன் ரசிகர்களை உச்சிக் குளிர செய்துள்ளது. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இந்த வயதிலும் கோலிவுட்டில் அடுத்தடுத்து படங்களை இளம் நடிகர்களுக்கு போட்டியாக லைன் அப்பில் வைத்திருப்பதை பார்த்து மற்ற நடிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
KH234 படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 3 படத்தை ஆரம்பிப்பார் கமல் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியன் 2, கல்கி என வேறலெவலில் ஆண்டவரும் அசத்த காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











