பாகுபலியையே முந்திய விஜய்யின் 'கத்தி' தெலுங்கு ரீமேக் வசூல்
ஹைதராபாத்: சிரஞ்சீவியின் கைதி எண் 150 படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.
மகன் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்த படம் கைதி எண் 150. அரசியலுக்கு சென்ற சிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து நடித்த படம் இது. விஜய்யின் கத்தி ரீமேக்கான இந்த படம் நேற்று முன்தினம் உலக அளவில் 2 ஆயிரத்து 800 அரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

ரூ. 50 கோடி
படம் வெளியான இரண்டே நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. அதிவேகமாக ரூ.50 கோடி வசூல் செய்த தெலுங்கு படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பாகுபலி
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 22.4 கோடி வசூல் செய்தது.

சிரு ராக்ஸ்
கைதி எண் 150 படம் ரிலீஸான முதல் நாள் ரூ.23.24 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பிரமாண்ட படமான பாகுபலியின் முதல் நாள் வசூல் சாதனையை சிரஞ்சீவியின் படம் முறியடித்துள்ளது.

வசூல்
கைதி எண் 150 படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் ரூ.30 கோடியும், அமெரிக்காவில் ரூ.9 கோடியும் வசூல் செய்துள்ளது. சிரஞ்சீவியின் படம் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











