For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காக்கியில் சிக்ஸ் பேக்கில் கலக்கும் விஜய் ஆண்டனி - 2020 ஜனவரி ரிலீஸ்

|

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி சிக்ஸ் பேக்கில் மிரட்டும் காக்கி படத்தை 2020 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த படத்தில் யூனிபார்ம் போடலன்னாலும் நான் போலீஸ்தான் என்று கெத்து காட்டுகிறார் விஜய் ஆண்டனி.

திமிரு பிடிச்சவன் படத்தில் காக்கிச்சட்டை போட்டு காவல்துறை அதிகாரியாக நடித்தவர் விஜய் ஆண்டனி. மீண்டும் புதிய படத்தில் காக்கி யூனிபார்ம் போடுகிறார்.

Khakee movie Vijay Antony appearing in Six Pack look

விஜய் ஆண்டனி தற்போது அக்னிச் சிறகுகள், தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் வாய்மை படத்தை இயக்கிய ஏ.செந்தில் குமார் இயக்கும் இந்த படத்திற்கு காக்கி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

பூஜை போட்ட நாளிலேயே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் சிக்ஸ் பேக்கில் மிரட்டும் விஜய் ஆண்டனி , யூனிபார்ம் போடலனாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே காக்கி' டா என்று மிரட்டுகிறார்.

Khakee movie Vijay Antony appearing in Six Pack look

இந்த படத்தில் விஜய் ஆன்டனி உடன் சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா, சன் டிவி புகழ் கதிர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் ஜெய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்சத்திரங்களின் கலவை காக்கி என்கின்றனர் படக்குழுவினர்.

டிவி நிகழ்ச்சியில் முற்றிய சண்டை: முன்னாள் காதலரை ஓங்கி அறைந்த நடிகை

ஜூன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவிகித படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டனவாம். ஷிமோகா, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன்-ஷியாமின் அதிரடி காட்சி அமைப்பில், தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார். இப்படம் அதிரடி காட்சிகளின் பின்னணியில் உருவாகி வரும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் பாங்கானப் பொழுதுபோக்குப் படமாகும்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு இதுவரை தயாராகியிருக்கும் இப்படத்தின் எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்ட பின்னர், கதையின் ஆழத்தையும், தகுதிகளையும் கருத்தில் கொண்டு, இப்பட உரிமைகளை வாங்கிட தீர்மானித்தித்தது. மேலும், தயாரிப்பாளர் ஓபன் தியேட்டர் உடன் இணைந்து, மார்கெட்டிங், விநியோகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் முடிவு செய்திருக்கிறது.

ஜனவரி 2020ஆம் ஆண்டில் இப்படத்தை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர் மற்றும் ட்ரைலரை அக்டோபர் மாதமும் வெளியிட இப்படக்குழு முடிவு செய்திருக்கிறது.

English summary
Actor Vijay Anthony acted Khakee movie first look poster will be released in September this year and trailer will be released in October.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more