ரவுடி பிக்சர்ஸ் வெளியிடும் ராக்கி ஓடிடியில் வெளியாகிறதா?

சென்னை : விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் முதல் திரைப்படம் ராக்கி.

வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ரத்தம் தெறிக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியிருக்கும் ராக்கி தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஹார்ட் பீட்டை எகிற

ஹார்ட் பீட்டை எகிற

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ராக்கி. தமிழ் சினிமாவில் இதுவரை பல கேங்ஸ்டர் திரைப் படங்கள் வந்திருந்தாலும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமாகவும் நொடிக்கு நொடி ஹார்ட் பீட்டை எகிற செய்வதாகவும் இருக்கும் என இயக்குனர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆர் ஏ ஸ்டுடியோ தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ், நடிகை ஸ்ரேயா சரண் உடன் இணைந்து வெளியிடுகின்றனர்

பாரதிராஜா

பாரதிராஜா

தரமணிக்குப் பிறகு அனைவராலும் அறியப்பட்ட நடிகர் வசந்த் ரவி இதில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகினி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைத்திருந்தார் டர்புகா சிவா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ராக்கி டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் உறைய வைத்தது.

Recommended Video

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம்.. பயங்கர அப்செட்டில் விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ
ராக்கி

ராக்கி

சென்ற ஆண்டே ராக்கி வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் திடீரென போடப்பட்ட ஊரடங்கும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. அந்த வகையில் ராக்கி திரைப்படமும் வெளியாகாமல் முடங்கிப் போனது .

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த நிலையில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட பல நாட்கள் ஆகும் என்பதால் வரிசையாக ஓடிடியை நோக்கி படை எடுக்கும் படங்களின் வரிசையில் தற்போது ராக்கியும் இணைந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ராக்கி ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக் காகிதம் படத்தை இயக்குகிறார் இதில் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X