சுனைனாவை திருமணம் செய்யப் போகிறாரா துபாய் யூடியூபர்?.. கேரளாவில் ஸ்டே.. சாபமிட்ட முன்னாள் மனைவி!

வயநாடு: துபாயை சேர்ந்த பிரபல யூடியூபரான காலித் அல் அமெரி என்பவரை நடிகை சுனைனா நிச்சயம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை சுனைனா தனக்கு நிச்சயம் ஆகி விட்டது என பதிவிட்டுள்ளார். அதே தேதியில் பிரபல யூடியூபரான காலித் அல் அமெரியும் தனக்கு நிச்சயம் ஆகி விட்டது என பதிவிட்டதும் நெட்டிசன்கள் இருவருக்கும் இடையேயான நட்பு மற்றும் அடிக்கடி சோஷியல் மீடியாவில் மாறி மாறி போட்டுக் கொள்ளும் லைக்குகளால் இவர்கள் இருவரும் தான் நிச்சயம் செய்துக் கொண்டதாக கெஸ் செய்துள்ளனர்.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சுனைனா நகுலை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அப்போது கிசுகிசுக்கள் குவிந்தன. இருவரும் இணைந்து அடுத்தடுத்து படங்களில் நடித்ததால் அப்படியொரு பேச்சு கிளம்பியது.

Sunaina marriage rumour

ஆனால், நகுல் உடனடியாக தனது திருமணத்தை முடித்துக் கொண்ட நிலையில், அந்த வதந்தி முடிவுக்கு வந்தது. இந்நிலையில், சுனைனா தனது வருங்கால கணவர் குறித்து அறிவிக்காத நிலையில், காலித்தவரைதான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்கின்றனர்.

வயநாட்டில் காலித்: துபாய் யூடியூபரான காலித் அல் அமெரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள் அவர் இந்தியாவின் கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் அந்த போட்டோவை எடுத்துள்ளார் என்றும் காலித் மற்றும் சுனைனா இருவரும் தற்போது கேரளாவில் தான் உள்ளனர் என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.

Sunaina marriage rumour

முதல் மனைவியும் 2 மகன்களும் தவிப்பு: காலித் அல் அமெரி முன்னதாக பிரபல யூடியூபரான சலாமா என்பவரை திருமணம் செய்திருந்தார். அந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் தான் சலாமாவை விவாகரத்து செய்து பிரிந்தார் காலித். அதற்குள் அதிரடியாக நடிகை சுனைனாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? என கேள்விகள் எழுந்துள்ளன. சுனைனாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாகத்தான் சலாமாவை விவாகரத்து செய்தார் என்றும் கூறப்படுகிறது.

2வது மனைவியாகும் நடிகைகள்: சமீப காலமாக நடிகைகளுக்கு திருமணமானவர்கள் மீதுதான் காதல் வருகிறதே ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். வனிதா விஜயகுமார், வரலட்சுமி சரத்குமாரை தொடர்ந்து சுனைனாவும் திருமணமானவரையே திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுவரை இது தொடர்பாக இருவருமே எந்தவொரு அறிவிப்போ மறுப்போ தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

நல்லா இருக்கமாட்டாங்க: சமீபத்தில், தனது விவாகரத்து குறித்து பேசிய சலாமா இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் உள்ளேன். ஆரம்பத்தில் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தேன். அதன் பின்னர் கணவருக்கு கட்டுப்பட்டு இருந்தேன். கடந்த சில மாதங்களாக சுதந்திரமாக இருக்கிறேன் எனக் கூறிய அவர், சிலரை சும்மா விட மாட்டேன் என்றும் சில துரோகங்களை செய்பவர்கள் நல்லா இருக்கமாட்டாங்க என்றும் சாபமும் விட்டுள்ளார்.

மதம் மாறுகிறாரா சுனைனா?: யூடியூபர் காலித்தை திருமணம் செய்துக் கொள்ள நடிகை சுனைனா மதம் மாறப் போகிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. காலித் கேரளாவில் முகாமிட்டுள்ள நிலையில், உடனடியாக இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X