»   »  ரூ. 1000 கோடி கிளப்பை துவங்கிய பிரபாஸ்: நொந்து நூடூல்ஸான கான்கள்

ரூ. 1000 கோடி கிளப்பை துவங்கிய பிரபாஸ்: நொந்து நூடூல்ஸான கான்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி 2 பட வசூலால் பாலிவுட்டின் கான்கள் எல்லாம் மிரண்டு போய் உள்ளார்களாம்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.


ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2 என்பது குறிப்பிடத்தக்கது.


கான்கள்

கான்கள்

கான்கள் இல்லை, கபூர்கள் இல்லை, ரோஷன் இல்லை இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான பாகுபலி 2 படம் பாக்ஸ் ஆபீஸில் சுனாமியாய் வசூல் செய்து வருகிறது.


மிரண்டு

மிரண்டு

பாகுபலி 2 இந்தியில் மட்டும் ரிலீஸான பத்து நாட்களில் ரூ. 327. 75 கோடி வசூல் செய்துள்ளது. கான்கள் பட வசூலை பாகுபலி 2 தூக்கி சாப்பிட்டுள்ளது அவர்களை மிரள வைத்துள்ளது.


கடுப்பு

கடுப்பு

பாகுபலி 2 இந்தி பதிப்பை வெளியிட்டவர் பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் தான். 3 கான்களுமே கரணுக்கு மிகவும் நெருக்கம். ஆனால் யாருமே பாகுபலி 2 பற்றி ட்வீட் செய்யவில்லை.


கரண்

கரண்

பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடி வசூல் செய்ததும் அதை ட்விட்டரில் அறிவித்து பெருமைபட்டவர் கரண் ஜோஹார். ஒரு டப்பிங் படம் இந்தி பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்வது கான்களுக்கு பிடிக்கவில்லையாம்.


English summary
Here's Why Insiders Think Khans Are Upset About Baahubali's Success Baahubali 2 has broken all the box office records of the three Khans, Salman, Shahrukh and Aamir and has become the highest grossing Indian film worldwide. It seems that the Khans are not very happy about it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil