AR Rahman: ஹாலிவுட் விருதை வென்ற ஏ.ஆர். ரஹ்மான்.. வாழ்த்துமழை பொழிந்த மகள்கள்!

சென்னை: நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் மிக நீண்ட கால இடைவெளியில் உருவாக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன படம் ஆடுஜீவிதம். கோட் லைஃப் என்ற பெயரில் மற்ற மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆடு ஜீவிதம் படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். இவரது நடிப்பினை ரசிகர்கள் பரவலாக பாராட்டினர்.

படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். இந்நிலையில் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் மியூசின் அண்ட் மீடியா விருது வழங்க, அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதினை வாங்கப்போகும் முதல் இந்தியர் இவர்தான்.

ar rahman hmma 2024 aadujeevitham

ஏற்கனவே படத்தின் பின்னணி இசையை கிராமி விருதுகளுக்கு அனுப்பமுடியவில்லை. அதற்கு காரணம், கிராமி விருதுகள் லிமிட்டேசன்ஸின் விதிமுறைகளில் அடங்கக்கூடிய கால அளவில் ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசை இல்லை எனவும், விதிமுறைகளை விடவும் அதிகமாக இருந்ததாகவும் ஏ.ஆர் ரஹ்மானே தெரிவித்தார். இந்நிலையில், ஆடு ஜீவிதம் படத்திற்காக HMMA விருதினை ஏ.ஆர். ரஹ்மான் வென்றுள்ளது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ar rahman hmma 2024 aadujeevitham

ஆடு ஜீவிதம் படம் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட மலையாள நாவலான ஆடு ஜீவிதம் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். நேரடி மலையாளப் படமாக உருவானாலும், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. ஆடு ஜீவிதம் படத்தினைப் பொறுத்தவரையில் ரசிகர்கள் மத்தியில், அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால், படம் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ar rahman hmma 2024 aadujeevitham

ஆடு ஜீவிதம்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் அதிகம் விற்பனையான மலையாள நாவலான ஆடு ஜீவிதம் நாவலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த நாவலை பென்யாமின் எழுதியுள்ளார். இந்த நாவல் கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவர், வேலைக்காக அரபு நாட்டிற்குச் சென்று, அங்கு தான் எதிர்கொண்ட பிரச்னைகளை மைய்யமாகக் கொண்டு கொண்டு எழுதப்பட்டது.

ar rahman hmma 2024 aadujeevitham

இந்தப் படத்தில் நஜீப்பின் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் பிரமாதமாக நடித்திருந்தார். இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், வெளிநாடுகளில் வேலைக்காக புலம் பெயர்ந்து வாழக்கூடிய தங்களது குடும்பத்தினரை நினைத்து பலரும் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு நடித்திருந்தார்.

ஹாலிவுட்: ஆடுஜீவிதம் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும்பாலும் பாராட்டப்பட்டது. அதிலும் பின்னணி இசை நிச்சயம் பல விருதுகளை வெல்லும் என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே படத்தின் பின்னணி இசையை கிராமி விருதுகளுக்கு அனுப்பமுடியவில்லை. அதற்கு காரணம், கிராமி விருதுகள் லிமிட்டேசன்ஸின் விதிமுறைகளில் அடங்கக்கூடிய கால அளவில் ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசை இல்லை எனவும், விதிமுறைகளை விடவும் அதிகமாக இருந்ததாகவும் ஏ.ஆர் ரஹ்மானே தெரிவித்தார்.

ar rahman hmma 2024 aadujeevitham

இந்நிலையில் படத்தின் பின்னணி இசைஹாலிவுட் மியூசிக் மிடியா விருதுக்கு (HMMA) தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹாலிவுட் திரையுலகினருக்கு வழங்கப்படும் நித விருதுகளில், வெளிநாட்டுப் படங்களின் பிரிவில் ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மகள்கள் வாழ்த்து: மேலும் ஆடுஜீவிதம் படத்தின் ரசிகர்களும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்களுக்கும் இந்த விருது மகிழ்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர், இந்தப் படத்தினை திரைக்கு கொண்டுவர கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டார்.

ar rahman hmma 2024 aadujeevitham

இதற்கிடையில் அவரது மகள் ரஹுமா ரஹ்மான், தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தந்தையின் படத்திற்கு கிரீடம் அணிவித்துள்ளார். அதேபோல், அவரது மற்றொரு மகள் கதீஜா, வாழ்த்து தெரிவித்து, நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X