இழிவான பெண்.. மந்த மூளை.. நான் பதில் சொல்ற அளவுக்கு வொர்த் இல்லை.. குஷ்புவையா சொல்கிறார் காயத்ரி?

சென்னை நடிகை குஷ்புவும் நடிகை காயத்ரி ரகுராமும் டிவிட்டரில் சண்டை போட்டு வருகின்றனர்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் உள்ளார். இருவரும் அரசியல் தொடர்பான விஷயங்களை அவ்வப்போது டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை திருடியதாக கூறி சிலர் பிடித்து ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லும்படி தாக்கியதாக கூறப்பட்டது. இதுதொடர்பனா வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய இந்தியாவா?

புதிய இந்தியாவா?

இந்நிலையில் தாக்கப்பட்ட இளைஞர் அண்மையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக டிவிட்டிய குஷ்பு ஜெய்ஸ்ரீராம் சொல்லி ஒரு இளைஞரை கொன்றுவிட்டனர் இதுதான் புதிய இந்தியாவா என கேட்டார்.

வாய் திறப்பதில்லையே

வாய் திறப்பதில்லையே

அதற்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்தார்.இந்துக்களை கொலைகாரர்கள் போல் பார்ப்பது டிரெண்டாகி விட்டது. மற்ற மதத்தினர் இதுபோல் தவறு செய்யும்போது குஷ்பு வாய் திறப்பதில்லையே என சாடினார் காயத்ரி.

சத்தமாக அழுங்கள்

தொடர்ந்து இதுசம்பந்தமாக இருவரும் காரசாரமான பதிவுகளை டிவிட்டரில் வெளியிட்டு சூடாக்கி வருகின்றனர். மேலும் ஒரு டிவிட்டில் குஷ்புக்கு பதிலடி கொடுத்துள்ள காயத்ரி, ஒரு நாள் தமாதமாக டிவிட் செய்வதில் இருந்தே காங்கிரஸ்க்கு உங்களால் என்ன செய்ய முடியும் என தெரிகிறது. என்ன சொல்றதுன்னு தெரியவில்லை. சத்தமா அழுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இழிவான பெண்

இழிவான பெண்

மற்றொரு பதிவில் பதில் சொல்லும் அளவுக்கு அவர் வொர்த் இல்லை. மதத்தை பற்றி பேசுபவர்கள் வெறுப்பை பரப்புவர்கள். கடவுள் இருக்கிறார். என்னைப் பற்றிய அவரது அவதூறான ட்வீட் நாளை வரும். இழிவான பெண்.

சிறுத்தவள் இல்லை

அவரது மந்தமான மூளைக்கு நான் ஒன்றும் சிறுத்தவள் இல்லை. பிறப்புரிமைக்காக தொடர்ந்து நிற்பேன். இந்துக்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், வெறுப்பவர்களுக்கும் பொய் சொல்பவர்களுக்கும் நான் காவியை சேர்ந்தவள்தான். இவ்வாறு காட்டமாக பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X