மறந்த ஒரு வார்த்தை.. அர்த்தமே மாறியது.. மன்னிப்பு கேட்டார் குஷ்பு!

சென்னை : அர்த்தம் மாறிய வார்த்தையால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் குஷ்பு.

Recommended Video

Serial Shooting தொடங்கனும் நடிகை Kushbu அமைச்சரிடம் கோரிக்கை

நடிகை குஷ்பு எப்போதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் செய்யும் வேலைகளையும் , நாட்டில் நடக்கும் அன்றாட செய்திகளையும், அரசியல் உட்பட பல ட்விட்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது வழக்கம் .

கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் குஷ்பு சமீபத்தில் தான் உடற்பயிற்சி செய்ததாக குறிப்பிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டார். "நல்ல ஒர்க் அவுட்டை விட சிறந்தது எதுவும் இல்லை. அதற்காக ஒரு விலை உயர்ந்த ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டிலேயே செய்யலாம்.

ஒரு நாளை பாசிடிவாக துவங்க இது ஒரு நல்ல வழி. துவங்குங்கள், தாமதம் ஆகிவிடவில்லை. அதுக்கு நான் கேரன்டி" என்று ஒரு ட்விட்டை பதிவிட்டு இருந்தார் குஷ்பு.

Khushboo apologized to the fans

ஆனால் அந்த ட்விட்டர் பதிவில் "not "என்கிற வார்த்தையை அவர் போட மறந்துவிட்டார், அதனை படித்த அவரது ரசிகர்கள், அவர் மறந்த ஒரு வார்த்தையினால் அந்த ட்விட்டின் அர்த்தமே மாறிவிட்டது என சுட்டிக்காட்டினர். அதை பார்த்த குஷ்பு அதற்கு மன்னிப்பு கேட்டு மற்றொரு ட்விட்டையும் பதிவிட்டுள்ளார்.

Khushboo apologized to the fans

பொதுவாகவே சமூகவலைத்தளத்தில் "ஆக்டிவாக இருப்பவர்கள் டைப் செய்யும் போது ஒரு சில வார்த்தைகளை விட்டுவிடுவதுண்டு. அவர்கள் கையை விட மூளை இன்னும் வேகமாக டைப் செய்வது தான் இதற்கு காரணம். நான் அப்படிப்பட்டவர் தான். தவறுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என ரீ ட்விட் செய்துள்ளார் குஷ்பு.

Khushboo apologized to the fans

சமீபத்தில் கூட அவர் வீட்டுவேலைகளை செய்து விட்டு ஓய்வு எடுப்பது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X