அந்த நடிகர் குடிக்கு அடிமையாகிவிட்டார்.. அதனால்தான் இறந்தார்.. ஓபனாக பேசிய குஷ்பூ
சென்னை: குஷ்பூ தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர். 80கள், 90களில் அவர் அத்தனை படங்களில் நடித்தார். அவருக்கென்று தமிழ்நாட்டில் கோயிலும் கட்டப்பட்டது. ஒருகட்டத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து குணசித்திர கதாபாத்திரங்களிலும், சீரியலிலும் நடித்தார். அரசியலிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த குஷ்பூ தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையானார். கோலிவுட்டில் அறிமுகமான சில படங்களிலேயே தமிழை முறையாக கற்றுக்கொண்டு தனது சொந்த குரலில் டப்பிங் பேசி ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என 80களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த அத்தனை பேருடனும் நடித்தவர் அவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்தவர்.

சுந்தர்.சியுடன் திருமணம்: முறைமாமன் படத்தில் நடித்தபோது சுந்தர்.சியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல வருட காத்திருப்புக்கு பிறகு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். இன்றுவரை உச்சக்கட்ட காதலோடு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் அடியெடுத்து வைத்த அவர் இப்போது பாஜகவில் இருக்கிறார். இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் ராஜீவ் கபூர் குறித்து குஷ்பூ ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
குஷ்பூ பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "ராஜீவ் கபூருக்கு இதய பிரச்னை இருந்தது. அதுமட்டுமின்றி மதுவுக்கு அவர் ரொம்பவே அடிமையாகிவிட்டார். அந்த மது பழக்கம் அவருக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தது. இதனால் அந்தப் பழக்கத்திலிருந்து அவரை வெளியே கொண்டு வர எவ்வளவோ நாங்கள் முயற்சி செய்துபார்த்தோம். ஆனால் எதுவுமே பலனை கொடுக்கவில்லை. அவர் ரொம்பவே தாழ்வான இடத்துக்கும் சென்றுவிட்டார் என்பதும் ஒரு உண்மை.
இரண்டு முறை அறுவை சிகிச்சை: அவருக்கு முழங்காலிலும் பிரச்னை இருந்தது. அதனை சரி செய்வதற்கு இரண்டு முறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதுவும் அவருக்கு எந்தவிதமான உதவியையும் செய்யவில்லை. அவர் இறக்கும்போது நான் மும்பையில்தான் இருந்தேன். முதன் முறையாக போனி கபூர்தான் ராஜீவின் இறப்பு செய்தியை எங்களுக்கு சொன்னார். அது எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அவர் இறப்பதற்கு ஒருநாள் முன்புதான் அவருடன் பேசினேன். கொரோனா காலகட்டத்தில் அவருக்கு அதிக காய்ச்சல் வேறு வந்துவிட்டது.
அலட்சியமாக இருந்தார்: உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர் சுய நினைவில்தான் இருந்தார். அவர் தனது உடல்நிலையை ரொம்பவே அலட்சியமாக எடுத்துக்கொண்டார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எப்படியும் உடல்நிலையை தேற்றிக்கொண்டு விரைவில் சந்திக்கிறேன் என்று என்னிடம் உறுதி கூறியிருந்தார். அவரது மரணம் இப்போதும் எனக்கு அதிர்ச்சியைத்தான் கொடுக்கும். நாங்கள் அவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இன்னும் அவர் எங்களுடனேயேதான் இருக்கிறார் என்று இன்னமும் நம்புகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











