‘‘விஜய் சேதுபதியை நல்லா திட்டுங்க“ .. விக்ரம் படம் பார்த்த குஷ்பு பேட்டி!

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள விக்ரம் படத்தைப் பார்த்த குஷ்பு விஜய் சேதுதுபதியை நல்லா திட்டுங்க என்று கூறியுள்ளார்.

நேற்று தமிழகமெங்கும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகளுடன் விக்ரம் படம் வெளியானது. கமலின் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை விக்ரம் படம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படம் வசூலில் புதிய ரெக்கார்டை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கமலின் விக்ரம் நேற்று வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம்

விக்ரம்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நேற்றை தினம் வெளியான திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தை இளம் மாஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.

உலகத்திற்கே சிறந்த நடிகர்

உலகத்திற்கே சிறந்த நடிகர்

விக்ரம் படம் பார்த்த நடிகை குஷ்பு, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கமலுடன் நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன். கமல்ஹாசன் இந்தியாவின் சிறந்த நடிகர் என்று சொல்வதை விட, இந்த உலகத்திற்கே சிறந்த நடிகர் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தான். தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் கமல் நிரூபித்து இருக்கிறார்.

அவரை திட்டணும்

அவரை திட்டணும்

விக்ரம் படத்தில் கமல் மட்டுமல்ல பகத் பாசில், விஜய் சேதுபதி என ஒவ்வொரு கதாபாத்திரமும் பயங்கரமாக இருந்தது. விஜய் சேதுபதியின் நெகடிவ் கதாபாத்திரத்தை பார்க்கும் போது அவரை திட்டணும் போல தோன்றுகிறது. அவ்வளவு இயல்பாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

Recommended Video

Vikram படத்தில் நடித்திருக்கும் 3 சின்னத்திரை பிரபலங்கள்,பாராட்டும் ரசிகர்கள் #Celebrity |
மிரட்டலான படம்

மிரட்டலான படம்

பகத் பாசிலின் நடை, பார்வை என அப்படியே மிரட்டி இருக்கிறார். நிச்சயம் அவர் நடிப்பு அனைவரையும் கவர்ந்து, அவருக்கு அனைவரும் முத்தம் கொடுப்பாங்க எல்லாருமே சூப்பரா பண்ணியிருக்காங்க. இவங்க எல்லாருடைய நடிப்பும் மிரட்டும் வகையில் இருக்குனா அதற்கு காரணம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். இந்த படம் நிச்சயம் கோலிவுட்டுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். விக்ரம் டீமுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X