twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீட்பு… காவல்துறைக்கு நன்றி !

    |

    சென்னை : முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக குஷ்பு கூறியுள்ளார்.

    கணக்கை மீட்டுக் கொடுத்த தமிழக டிஜிபி மற்றும் போலீசாருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    க்ளீன் போல்ட்... வேற ரேஞ்சில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ க்ளீன் போல்ட்... வேற ரேஞ்சில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ

    கடந்த 20ந் தேதி தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு விட்டதாக குஷ்பு புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் விரைவாக செயல்பட்டு கணக்கை மீட்டுள்ளனர்.

    ட்விட்டர் முடக்கம்

    ட்விட்டர் முடக்கம்

    பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பு ட்விட்டர் வலைதளத்தில் காரசாரமான அரசியல் பதிவுகளை வெளியிட்டு வந்தார். அவை பல சமயங்களில் பேசுபொருளாக, விவாதகளமாக அமைந்துள்ளது. இந்நிலையில் குஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்ட் திடீரென முடக்கப்பட்டது.

    டிஜிபி அலுவலகத்தில் புகார்

    டிஜிபி அலுவலகத்தில் புகார்

    மேலும், அதிலிருந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. குஷ்புவை ட்விட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் தொடர்ந்து வந்தனர். அவர் 710 பேரை தொடர்ந்து வருகிறார். இது குறித்து குஷ்பு கடந்த 20ந் தேதி தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

    Recommended Video

    DGP Sylendra Babu-ஐ சந்தித்த Khushbu Sundar | Twitter Account Hacked | Oneindia Tamil
    ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்

    ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்

    குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்தை தெரிவிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி இருந்தனர். குஷ்புவின் ட்விட்டர் கணக்கை மீண்டும் அவரிடமே வழங்க வேண்டுமென்றும் அந்த கடிதத்தில் கூறி இருந்தனர்.

    காவல்துறை நன்றி

    காவல்துறை நன்றி

    இந்நிலையில், இன்று நடிகை குஷ்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், முடக்கப்பட்ட தனது ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்த தமிழக டிஜிபி மற்றும் போலீசாருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டும் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    On the 20th, Khushbu had complained to DGP Sylendra Babu that her Twitter account had been disabled. Now her Twitter account has been recovered and so she thanked DGP.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X