டவுசரில் ஊர் சுற்றிய பிரபலங்கள்..பழைய நினைவை பகிர்ந்தார் குஷ்பூ !

சென்னை : நடிகை குஷ்பூ, நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருடன் குட்டி டவுசரில் ஊர் சுற்றிய பழைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT | சுந்தர் c காதலை சொன்ன விதம் | FILMIBEAT TAMIL

காலத்தால் அழியாத பல திரைப்படங்களில் நடித்து இன்றும் பலரின் நெஞ்சங்களில் அழியாத நினைவுகளை பெற்றிருப்பவர் நடிகை குஷ்பு.

என்றும் இளமையுடன் வலம் வரும் நடிகை குஷ்பு, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

நண்பர்களாக பழகி

நண்பர்களாக பழகி

சினிமாவில் இருவேறு துறைகளில் பணியாற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் இங்கு நண்பர்களாக பழகி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்புவும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரும் நீண்டகால இணைபிரியாத நண்பர்களாக வலம் வருகின்றனர்.

வெள்ளிவிழா கொண்டாடி

வெள்ளிவிழா கொண்டாடி

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு ரஜினி, கமல், கார்த்திக், பிரபு உட்பட பல உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த வருஷம்16, அண்ணாமலை, சிங்காரவேலன், சின்னத் தம்பி உட்பட பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வெள்ளி விழா கொண்டாடி இருக்கிறது.

தொலைக்காட்சி தொடர்களிலும்

தொலைக்காட்சி தொடர்களிலும்

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த குஷ்புவிற்கு உலகெங்கிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இவ்வாறு படங்களில் கலக்கி வந்த நடிகை குஷ்பு சமீபகாலமாக தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பலரையும் ஈர்த்து வருகிறார்.

ஹே சனாமிகா

ஹே சனாமிகா

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி சினிமாவிலும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாக இருந்து வருகிறார். பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் அவர்களின் சகோதரியான பிருந்தா மாஸ்டர் தமிழில் தெறி, காக்க காக்க, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் தற்பொழுது ஹே சனாமிகா என்ற தனது முதல் திரைப்படத்தையும் இயக்கிவருகிறார்.

ஸ்டைலிஷ் புகைப்படங்களை

ஸ்டைலிஷ் புகைப்படங்களை

நடிகை மற்றும் நடன இயக்குனர் என இரு வேறு பிரிவுகளில் சினிமா துறையில் இருந்துவரும் குஷ்பு மற்றும் பிருந்தா மாஸ்டர் பல வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்தபோது டவுசர் அணிந்து கொண்டு இருவரும் அந்த ஊர் தெருக்களில் ஹாயாக சுற்றி வந்த ஸ்டைலிஷ் புகைப்படங்களை ஞாபகார்த்தமாக வைத்திருந்த குஷ்பு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து அனைவரும் நல்ல நண்பர்கள், ஸ்வீட் மெமரீஸ் மற்றும் இருவரும் சூப்பர் என்று வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X