ஓய்வின்றி உழைக்கும் தேவதைகள்.. இல்லத்தரசிகளுக்கு நன்றி கூறிய குஷ்பு!

சென்னை : குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இல்லத்தரசிகளுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

ஓய்வின்றி உழைக்கும் தேவதைகள்.. இல்லத்தரசிகளுக்கு நன்றி கூறிய குஷ்பு! - வீடியோ

குஷ்பு என்றால் எப்போதும் ஒரு க்ரேஸ் இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவுக்கு அவர் நம்ம மனதில் பதிவித்து விட்டார். அவரின் அழகான முகம், நடிப்பு, தமிழ் உச்சரிப்பு என்று அனைத்தையும் ரசிக்க ஒரு ரசிகர் கூட்டமே அவர் பின்னால் இருக்கிறது.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என எந்த நடிகருக்கும் இவர் தான் நாயகி. அது மட்டு மல்ல எந்த மொழி படமானாலும் இவர் தான் ஹீரோயின். அந்த அளவுக்கு இவர் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருந்தது. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற ஒரு பெருமையும் இவருக்கு உண்டு.

திருமணம்

திருமணம்

2001ஆம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் கொண்டார். அதன் பின்னர் பல படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து வந்தார். அதே சமயம், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் மற்றும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சமூக வலையதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் தன்னுடைய பல போட்டோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

பாதுகாப்பாக இருப்போம்

பாதுகாப்பாக இருப்போம்

கொரோனா தொற்றால் பிரபலங்கள் அனைவரும் தங்களின் வீட்டில் நேரத்தை கழிக்கின்றனர், எனவே தங்களால் முடிந்த பல விழிப்புணர்வு வீடியோக்களை வீட்டிலிருந்த படியே ரெக்கார்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது குஷ்பு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது நாம் இந்த கடினமான நேரத்தில் நமக்காக போராடும் ஊழியர்களை கை உயர்த்தி வணங்க வேண்டும் என்றார். நாம் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இல்லத்தரசிகளுக்கு மரியாதை

இல்லத்தரசிகளுக்கு மரியாதை

ஆனால், நாம் பாதுகாப்பாக இருக்க, நமக்காக பலரும் களத்திலிருந்து போராடி வருகிறார்கள் அவர்கள் அனைவரும் உயிரை துச்சமாக எண்ணி போராடி வருகிறார்கள் என்றார். மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், காய்கறி வியாபாரிகள் என பலரையும் நாம் இந்த நேரத்தில் மதிக்க வேண்டும் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றார். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில், வழக்கமாக செய்யும் வேலைகளை விட இரண்டு, மூன்று மடங்கு வீட்டு வேலைகள் செய்து நமக்காக உழைக்கும் இல்லதரசிகளுக்கும் நாம் இந்த நேரத்தில் மரியாதை கொடுக்க வேண்டும்.

உதவுங்கள்

உதவுங்கள்

நம்மால் முடிந்த சில வேலைகளை செய்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கொரோனாவை விரட்ட நாம் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது ஒன்று தான் சிறந்த வழி என்றார். ஆகையால் வீட்டில் இருந்து நாம் கொரோனா என்ற கொடியை வைரசை விரட்ட வேண்டும் என்று, குஷ்பு தன் வீடியோவை முடித்தார். இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை இந்த காணொளி வெகுவாக கவர்ந்துள்ளது. ஏன் என்றால் இந்த நேரத்தில் ஓய்வின்றி உழைத்து வருது இல்லத்தரசிகள் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X