»   »  உங்க மணிரத்னத்தை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே: குஷ்புவை கலாய்த்த ரசிகர்

உங்க மணிரத்னத்தை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே: குஷ்புவை கலாய்த்த ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்று வெளியிடை படம் மணிரத்னத்தின் கவிதை என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் கலாய்த்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடித்த காற்று வெளியிடை படம் வெள்ளிக்கிழமை வெளியானது. படம் குறித்து பலரும் பல விதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


கவிதை

காற்று வெளியிடை மணிரத்னத்தின் கவிதை. ரவிவர்மாவின் விஷுவல் வழக்கம் போன்று அருமை. ரஹ்மான் வழக்கம் போன்று சூப்பர்ப்... உடைகள் கனவு போன்று உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.


மணி

உங்க மணியை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே என குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


படம்

விஷுவல்ஸ் நல்லா இருக்கு, இசையும் தான். ஆனால் படம் படுமோசம் என ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


அதிதி

காற்று வெளியிடையில் அதிதி கனவு போன்று உள்ளார். அவர் கண்கள் நம்மை வசீகரிக்கின்றன. அவரின் சிறப்பான நடிப்பால் ஒவ்வொரு பிரேமிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளார் என பாராட்டியுள்ளார் குஷ்பு.


English summary
Actress cum politician Khushbu tweeted that, '#KaatruVeliyadai is a poem by #ManiRatnam #RaviVarman's visuals r a treat 2 watch arrahman is as usual superb..costumes r like dream..'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos