twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்.. வாணி ஜெயராம் திடீர் மறைவு.. பிரபலங்கள் இரங்கல்!

    |

    சென்னை: சர்வதேச அளவில் இசை ரசிகர்களை கவர்ந்த பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகினரையும் இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் பாடிய "ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்" மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி என்றே அழைகக்ப்பட்டு வந்தார் வாணி ஜெயராம்.

    வாணி ஜெயராமின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்கள் அவரது மறைவு அதிர்ச்சியைத் தருகிறது என தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    அதிர்ச்சி.. பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய இசையுலகம் அதிர்ச்சி.. பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய இசையுலகம்

    ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி

    ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி

    இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயசுதா, ஸ்ரீவித்யா நடிப்பில் கடந்த 1975ம் ஆண்டு வெளியான படம் அபூர்வ ராகங்கள். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் அந்த படத்தின் டைட்டில் கார்ட் பாடலாக இடம்பெற்ற "ஏழு சுவரங்களில் எத்தனை பாடல்" பாடலை பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பாடி அசத்தி இருந்தார். அந்த பாடலுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் அவருக்கு ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி என்கிற பட்டத்தையே வழங்கி சிறப்பித்தனர்.

    தமிழ் பாடல்கள்

    தமிழ் பாடல்கள்

    இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை புரிந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற "ஏழு சுவரங்கள்" மற்றும் "கேள்வியின் நாயகனே", ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இடம்பெற்ற "என்னுள்ளில் எங்கோ", தீர்க்க சுமங்கலி படத்தில் இடம்பெற்ற "மல்லிகை என் மன்னன் மயங்கும்", பொல்லாதவன் படத்தின் "அதோ வாராண்டி" உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

    குஷ்பு அதிர்ச்சி

    குஷ்பு அதிர்ச்சி

    இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவு செய்தியே ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அடுத்து ஒரு பிரபலத்தின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாணி ஜெயராம் அம்மாவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

    உங்கள் குரல் கேட்டுக் கொண்டே இருக்கு

    "ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்!
    காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    கேட்டுக் கொண்டே இருக்கிறது.
    மழைக்கால மேகம் ஒன்று
    ரசித்துக் கொண்டே இருக்கிறோம்.
    அம்மா! என்றும் உங்கள் குரலில் உங்கள் நினைவில்!" என கமல் ரசிகர் ஒருவர் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

    ராதிகா வேதனை

    ராதிகா வேதனை

    மறைந்த இயக்குநர் கே. விஸ்வநாத் படத்தில் பாடகி வாணி ஜெயராம் எவ்வளவு அழகாக பாடியிருக்காங்க பாருங்க என நேற்று இரவு கூட என் கணவரிடம் சொல்லிட்டு இருந்தேன் என நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மன வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பல்வேறு மாநிலத்தில் இருந்து வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Khushbu and Radhika and so many celebs mourns for Veteran Singer Vani Jayaram demise on social media. Many fans shared Vani Jayaram beautiful Tamil songs in social media and pays condolences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X