HBD Khushbu - தமிழ் சினிமாவை ஆட்சி செய்த குஷ்பூ.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: Khushbu Birthday (குஷ்பூ பிறந்தநாள்) நடிகை குஷ்பூ இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
ரஜினிகாந்த், பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்தார். பிறகு வருஷம் 16 படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. அதனையடுத்து குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

விரைவிலேயே டப்பிங்: மும்பையை பூர்வீகமாகக் கொண்டாலும் குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். தனது சொந்த குரலில் வெகு விரைவிலேயே டப்பிங்கும் பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தவர் குஷ்பூ.
தொடர் ஹிட்டுகள்: குஷ்பூ முன்னணி கதாநாயகியாக இருந்தபோது தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா, சிங்காரவேலன் என மெகா ஹிட்டுகளையும், ரஜினியுடன் இணைந்து அண்ணாமலை, மன்னன், பாண்டியன் என ப்ளாக்பஸ்டர்களையும் கொடுத்திருக்கிறார்.
ஒரே வருடத்தில் 10 படங்கள்: 90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், "மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
கோயில்: அதேபோல் குஷ்பூவுக்கு பலர் தீவிர ரசிகர்களாக இருந்தனர். அவர்கள் குஷ்பூவுக்காக கோயில் கட்டிய நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் அரங்கேறின. கோயில் மட்டுமின்றி குஷ்பூ இட்லி என்ற பெயரிலும் உணவு ஒன்று உருவானது. தமிழ் சினிமா வரலாற்றில் நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்பூவுக்குத்தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.

குஷ்பூ பிறந்தநாள்: குஷ்பூ கடைசியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார்.அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இருந்துவரும் அவர் இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை சொல்லி வருகின்றனர்.
இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி குஷ்பூவுக்கு மொத்தம் 45லிருந்து 50 கோடிவரை மொத்த சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 10 கிலோவரை தங்க நகைகள், 80 கிலோவரை வெள்ளி பொருட்களும் இருக்கின்றன. மேலும் திருக்கழுக்குன்றத்தில் ஒரு சொகுசு பங்களா சொந்தமாக இரண்டு கார்கள் வைத்திருக்கிறாராம். இவற்றில் தன்னுடைய கணவரான சுந்தர் சி பெயரிலும் சொத்துக்களை வாங்கிப்போட்டிருக்கிறாராம். அதன்படி கோவையிலும், மேடவாக்கத்திலும் சுந்தர்.சி பெயரில் பங்களாவும் இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications