மன்சூர் அலி கானை சும்மா விட மாட்டேன்.. பெண்கள் என்றால் அவ்ளோ கேவலமா.. குஷ்பு விளாசல்!
சென்னை: நடிகர் மன்சூர் அலி கானுக்கு எதிராக பல சினிமா பிரபலங்கள் திரண்டு விட்டனர். நடிகை த்ரிஷா குறித்து மோசமான வகையில் கொச்சையாக பேசிய மன்சூர் அலி கானின் பேட்டி வீடியோ வெளியான நிலையில், அதை பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
த்ரிஷாவுக்கு சப்போர்ட்டாக நடிகை மாளவிகா மோகனன், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை ஒரு ஹீரோவும் இதுவரை பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. இந்நிலையில், நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நான் இந்த விவகாரத்தை சும்மா விடமாட்டேன் என மன்சூர் அலி கானை விளாசி உள்ளார்.
மன்னிப்பு கேட்காமல் விளக்கம்: நடிகை த்ரிஷா பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்காமல் தப்பாக எடிட் செய்து போட்டு விட்டார்கள் என மன்சூர் அலி கான் அந்தர் பல்டி அடித்து விளக்கம் சொல்லி தப்பிக்க பார்த்துள்ளார். ஆனால், அவர் நடிகைகளை பலாத்கார காட்சியில் தான் எப்படி டீல் செய்து நடித்தேன் என குஷ்பு, ரோஜா உள்ளிட்ட நடிகைகளுடன் நடித்தது குறித்தும், நடிகை த்ரிஷாவுடன் தனக்கு அப்படியொரு சீன் இல்லை என்பது குறித்தும் பேசிய காட்சிகள் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பு கோபம்: பெண்கள் என்றாலே மட்டமாக நினைத்து பேசும் எண்ணம் மன்சூர் அலி கானுக்கு எப்படி தோன்றியது. த்ரிஷாவிடம் மட்டும் இல்லை என்னிடமும் என்னுடன் நடித்த சக நடிகைகளிடமும் அவர் நிச்சயம் இதற்காக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என ட்வீட் போட்டு விளாசி உள்ளார்.
நடவடிக்கை எடுப்பேன்: மேலும், தேசிய மகளிர் ஆணையத்தில் அங்கத்தினராக இருக்கும் நான், இதுதொடர்பாக மேலிடத்திற்கு செய்தியை அனுப்பி விட்டேன். நிச்சயம் மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை பாயும் என்றும் நடிகைகளை தவறாக எண்ணும் எண்ணம் இனியும் எவருக்கும் வரக் கூடாது என விளாசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











