உச்ச நடிகருடன் போட்டோ எடுத்த பிரபல நடிகையின் மகள்: நீண்ட நாள் கனவு நிறைவேறிடுச்சாம்.. ஒரே ஜாலிதான்!
சென்னை: பிரபல நடிகையின் மகள் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பு இயக்குநர் சுந்தர் சியை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார். தொடர்ந்து சினிமா, சீரியல் என்றும் பிஸியாக உள்ளார் குஷ்பு.

தலைவர் 168 படம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வரும் குஷ்பு தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்திலும் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் போட்டோ
இதற்காக அண்மையில் ஹைதராபாத் சென்ற குஷ்பு, படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திததா நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் குஷ்பு.
உங்களின் எளிமை
என் இளைய மகளின் கனவு நிறைவேறியிருக்கிறது. சூப்பர்ஸ்டாரைப் பார்த்த தருணத்தில் அவள் இதயம் ஒரு துடிப்பைத் தவிர்த்தது.. நன்றி ரஜினிகாந்த் சார் உங்கள் நேரம் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக..
உங்கள் எளிமை அவளை போல்டாக்கிவிட்டது.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கோடான கோடி
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் குஷ்புவுக்கும் அவரது மகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினி காந்த் கோடான கோடி மக்களின் இதயங்களை போல்டு செய்திருக்கிறார். அதில் தற்போது உங்களின் இளவரசி அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். ஒரே தலைவர் ரஜினிகாந்த்தான் என்று கூறியுள்ளார் இவர்.
அப்போ என் நிலைமை
வாவ்வ்வ்வ்.. உங்களாலயே உங்க லிட்டில் டாட்டருக்கு இப்பதான் தலைவரை சந்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கா...
அப்ப என் நிலைமை.. என்று கேட்கிறார் இவர்.
எப்போதும் உண்டு
அவருடைய ஆசிர்வாதம் எப்போதும் உண்டு என்கிறார் இந்த நெட்டிசன்.
ஆன்மிகம்..
உண்மையிலேயே உங்கள் மகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்தான்.. அவரது ஆன்மீகம் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நேர்மறையான அதிர்வுகளை பரப்புகிறது.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











