Khushbu Tweet - குஷ்பூ வீட்டில் மரணம்.. இதயம் நொறுங்கிப்போன குடும்பத்தினர்

சென்னை: Khushbu Tweet (குஷ்பூ ட்வீட்) தனது வீட்டில் நிகழ்ந்த இறப்பு சம்பவம் அவரது குடும்பத்தினரின் இதயத்தை நொறுங்க செய்துவிட்டதாக எமோஷனலாக ட்வீட் செய்திருக்கிறார் குஷ்பூ.

தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.

மும்பை பூர்வீகம் ஆனாலும்: மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

Khushbu Emotional Tweet about her pet dog is dead

அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.

மீண்டும் நடிப்பில் குஷ்பூ: சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் தற்போது ராமபானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார் குஷ்பூ. ஆனால் அவர் நடித்த காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து தூக்கப்பட்டன.

குஷ்பூவின் வருத்தம்: இதற்கிடையே சமீபத்தில் பேட்டியளித்த அவர், "நான் நிறைய தெலுங்கு படங்களில் நடிக்க விரும்புகிறேன். கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வேன். ஒரு கதாபாத்திரம் பத்து நிமிடங்களே வந்தாலும் கூட அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. சரியான ஸ்க்ரிப்ட் கிடைத்தால் நடிக்க நான் ரெடி" என கூறியிருந்தார்.

குஷ்பூ வீட்டில் சோகம்: இந்நிலையில் குஷ்பூ வீட்டில் சோகமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அவர் வளர்த்துவந்த நாய் இறந்துவிட்டதால் ரொம்பவே எமோஷனலாக ட்வீட் செய்திருக்கிறார் அவர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "12 ஆண்டுகளாக எங்களில் ஒருவராக இருந்தாய். குட்டியாக வந்து எங்கள் இதயங்களில் இடம்பிடித்தாய். உன் புரிதல், அளவில்லா பாசம், சிரிப்பு உள்ளிட்ட குணங்கள் எங்களை கவர்ந்தன.

உன் இழப்பால் நாங்கள் இதயம் நொறுங்கிவிட்டோம். நீ சாந்தியடைந்து விட்டாய் என நம்புகிறோம். ஸ்னூப்பி உன்னை மிஸ் செய்வோம். உன்னை போன்று வேறு யாரும் இல்லை. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக்கொள்ளுங்கள்" என ட்வீட் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X