Khushbu: அதே வெட்கம்... புதுப்பொண்ணு லுக்கில் குஷ்பூ... அடேங்கப்பா அதுக்குள்ள 29 வருசம் ஆய்டுச்சா!!
சென்னை: 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் இயக்குநர் சுந்த சி-ஐ காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் புதுப்பொண்ணு லுக்கில் குஷ்பூ பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.
புதுப்பொண்ணு லுக்கில் குஷ்பூ: குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான குஷ்பூ, 1990களில் கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்த குஷ்பூ, வருஷம் 16, கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்ன தம்பி, மன்னன் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், கேப்டன் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் என 90களின் டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். முன்னணி ஹீரோக்கள் மட்டுமின்றி இயக்குநர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் குஷ்பூ கண்டிப்பாக இடம் பிடித்துவிடுவார். இதனால் கனவுக் கன்னியாக கிறங்கடித்த குஷ்பூவுக்கு கோயில் கட்டி கொண்டாடினர் தமிழ் ரசிகர்கள்.
இந்நிலையில், இயக்குநர் சுந்தர் சி-ஐ காதலித்த குஷ்பூ 2000ம் ஆண்டு அவரையே திருமணம் செய்துகொண்டார். திரையுலகின் வெற்றிகரமான நட்சத்திரத் தம்பதியாக வலம் வரும் சுந்தர் சி - குஷ்பூ ஜோடி, திருமண வாழ்க்கையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். இந்நிலையில் குஷ்பூ தற்போது பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் செம்ம வைரலாகி வருகிறது.
இந்த போஸ்ட்டில் சுந்தர் சி உடன் புதுப்பொண்ணு லுக்கில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள குஷ்பூ, “கிட்டத்தட்ட 29 ஆண்டுகளை கடந்த பிறகும், அதே வெட்கம் அதே புன்னகையை தருகிறது இந்த காதல்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதாவது சுந்தர் சி - குஷ்பூ இருவரும் காதலிக்கத் தொடங்கி 29 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இதனை திருமண நாள் கொண்டாட்டமாக நினைத்து மகிழ்வதாகவும் குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பூவின் இந்த இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. குஷ்பூவும் செம்ம க்யூட்டாக புதுப் பொண்ணு லுக்குடன் வைப் கொடுத்துள்ளார். சுந்தர் சி இயக்கிய முதல் படமான முறை மாமனில் குஷ்பூ தான் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications