அரசியலுக்கு சுந்தர் சி புதிதல்ல.. தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்.. குஷ்பு பேட்டி!
சென்னை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கி இருக்கும் இயக்குனர் சுந்தர் சி. இன்று மதுரை மத்திய தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக மதுரை மத்திய தொகுதிக்கு வந்த குஷ்பு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவிற்கும் தான் போட்டியே? தம்பி விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் மற்றதை மே 4ந் தேதி பார்க்கலாம் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு அரசியல் களத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொகுதியில் திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார்.
சுந்தர் சி: கடந்த இரண்டு முறையும் இந்த தொகுதியில் இருந்து அவர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறார். இந்த முறையும் இந்த தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை திமுக களம் நிறுத்தி உள்ளது. இருவரும் தமிழகம் நன்கு அறிந்த முகங்களாக இருப்பதால், இந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்தும் பெற்ற தொகுதியாகி மாறி உள்ளது. சுந்தர் சி இன்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், குஷ்பு செய்தியாளர்களிம் பேசினார்.
குஷ்பு பேட்டி: அப்போது, புதிதாக அரசியலில் களமிறங்கி இருக்கும் சுந்தர் சி அவர்களுக்கு நீங்கள் என்ன அட்வைஸ் கொடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ அவருக்கு அட்வைஸ் தேவையில்லை. எனக்கு அரசியலில் புரிதல் இருக்கு என்று நீங்கள் சொல்கிறீர்கள், அந்த புரிதலுக்கு காரணம் சுந்தர் சி தான். அவருக்கு அரசியலில் எந்த அளவு புரிதல் இருக்கு என்பதை அவர் களத்தில் இறங்கி பேசும்போது உங்களுக்கு புரியும், அரசியலுக்கு சுந்தர் சி புதிதல்ல என்றார். தொடர்ந்து பேசிய குஷ்பு, போட்டி இருந்தா தான் சுவாரஸ்யமாக இருக்கும் வெற்றி எளிதில் கிடைத்துவிட்டால் அதில், சுவாரஸ்யமே இருக்காது, போராடி செய்தால் தான் அந்த வெற்றியை கொண்டாட முடியும்.
விஜய்க்கு வாழ்த்துக்கள் : மதுரை மத்திய தொகுதிகள் சுந்தர் சி அவர்கள் பிடிஆர் பழனிவேல்ராஜனை எதிர்த்து களத்தில் இறங்கி இருக்கிறார். அவருக்கு வெற்றி கடுமையானதாக இருக்கும் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு. மக்கள் யார் நல்லது செய்கிறார்களோ அதை மட்டும் தான் பாப்பாங்க. குடும்பம், அரசியல் பாரம்பரியத்தை பார்த்து வாக்களித்த காலம் மாறிவிட்டது. யார் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தான் மக்கள் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் நான்கு முனை தேர்தல் நடந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவிற்கும் தான் போட்டியே? தம்பி விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார் அவருக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன். களத்தில் இப்போது தான் இறங்கி இருக்கிறார் மே நான்காம் தேதிக்கு பிறகு இதைப் பற்றி பேசலாம்.

பிரச்சரம் செய்வேன்: என் கணவர் சுந்தர் சி அரசியல் களத்தில் இறங்கிய பிறகு ஒரு விஷயத்தை சொன்னார், நான் விஜயை விமர்சிக்க மாட்டேன் என்று அவர் சொன்னது போல நானும் விஜய்யை விமர்சிக்க மாட்டேன். இன்று என்னுடைய கணவர் மதுரை மத்திய தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். ஒரு மனைவியாக நான் அவருடன் வந்து இருக்கிறேன். அவருடைய மனைவியாக அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என குஷ்பு பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











