குஷ்பு மகள் திருமண வேலைகள் களைகட்டுது.. முதலமைச்சர் விஜய்க்கு பத்திரிகை.. கண்டிப்பா வருவாரு!

சென்னை: கோலிவுட்டில் 80களின் இறுதியில் அறிமுகமாகி கலக்கியவர் குஷ்பு. முறைமாமன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்தார். பல வருடங்கள் காதலித்த அவர்கள் திருமணமும் செய்துகொண்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். இந்நிலையில் மூத்த மகளான அவந்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன.

தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு இருந்த கிரேஸ் அபரிமிதமானது. குஷ்பு இட்லி, குஷ்புவுக்கு கோயில் என பல விஷயங்களை ரசிகர்கள் செய்தார்கள். அவர் முறைமாமன் படத்தில் ஹீரோயினாக நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்தார். இரண்டு பேரும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

மகள்களும் சினிமாவில்: இரண்டு மகள்களுமே தங்களது தாய், தந்தை வழியில் சினிமாவில்தான் இருக்கிறார்கள். மூத்தவரான அவந்திகா மலையாளத்தில் ஆரம்பம் என்ற படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதேபோல் இரண்டாவது மகளான அனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தார். இப்போது டபுள் ஆக்குபென்சி என்ற படத்தில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

Khushbu Vijay

அவந்திகாவின் காதல்: சூழல் இப்படி இருக்க ஷ்ரவன் சீனிவாசன் என்பவரை காதலித்தார் அவந்திகா. அவர்களது காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டு வந்தார் குஷ்பு.

முதலமைச்சருக்கு பத்திரிகை: இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று தன் குடும்பத்துடன் நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார் குஷ்பு. மேலும் அவர்கள் விஜய்யுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள். இந்நிலையில் இதுகுறித்து குஷ்பு தன் எக்ஸ் பக்கத்தில், "எங்கள் குடும்பத்துக்கு சிறப்பான மற்றும் மறக்க முடியாத தருணம். எனது அன்பு சகோதரரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யை அவரது வீட்டில் சந்தித்தோம். எங்கள் மகள் திருமண அழைப்பிதழை வழங்கினோம்.

சந்தோஷம் நிரப்புகிறது: அவரை பார்க்கும்போதெல்லாம் எப்போதும் நம்முடைய இதயம் சந்தோஷத்தால் நிரம்புகிறது.என் மகள்கள் ரொம்பவே உறசாகமாக இருந்தார்கள். அவரின் மீதான அவர்களது பார்வை அகலவே இல்லை. பிஸியான நேரத்திலும் எப்போதும்போல் அன்பு, புன்னகை காட்டி வரவேற்றார். என் அன்பு சகோதரரே, 'உங்கள் விலை மதிப்பில்லாத நேரம், அன்பு, ஆசீர்வாதங்களுக்கு நன்றி. வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என குறிப்பிட்டிருக்கிறார். குஷ்பு மீது விஜய்க்கு எப்போதுமே தனி பிரியம் உண்டு. எனவே இந்தத் திருமணத்துக்கு விஜய் கண்டிப்பாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X