twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபரேஷன் முடிந்தது, வீட்டிற்கு கிளம்புகிறேன், ஆனால்...: வீடியோ வெளியிட்ட குஷ்பு

    By Siva
    |

    சென்னை: நடிகை குஷ்புவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து அவர் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

    நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    Khushbu is fine after surgery

    அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் குஷ்பு மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

    உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி. அறுவை சிகிச்சை முடிந்தது. நான் வீட்டிற்கு கிளம்புகிறேன். இரண்டு வாரம் ஓய்வில் இருப்பேன். ட்விட்டர் மூலம் உங்களுடன் தொடர்பில் இருப்பேன். ஆனால் முன்பு போன்று அடிக்கடி இல்லை.

    சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.

    எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. தமிழன்டா என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress cum congress spokesperson Khushbu has released a video on twitter saying that she is well after surgery.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X