இதை விட குஷ்புவுக்கு வேறென்ன வேண்டும்: #மகிழ்ச்சி
சென்னை: நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் அவர் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது ட்விட்டரில் வெளியிடுவார் குஷ்பு.

தனது குழந்தைகள் இவ்வளவு பெரிய ஆட்களாக வளர்ந்துவிட்டதை நினைத்து வியந்து ட்வீட் போட்டிருக்கிறார். இந்நிலையில் தனது செல்ல மகள்கள் அப்பா சுந்தர் சி.க்கு அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளார் குஷ்பு.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகான குடும்பம் மேடம், வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளனர். குஷ்புவின் மூத்த மகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு குஷ்பு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications