மெர்சலாயிட்டேன், தல படத்துக்கு விஸ்வாசமா போகலாம்: குஷ்பு
சென்னை: தல படத்திற்கு விஸ்வாசமா போகலாம் என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. விஸ்வாசம் திருவிழா கொண்டாட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது.
இந்நிலையில் விஸ்வாசம் பற்றி நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
குஷ்பு
வார்த்தையே இல்லை. என் ஜார்ஜ் க்ளூனி தல படத்துக்கு விஸ்வாசமா போகலாம்.. நயன் அழகாக உள்ளார் என்று ட்ரெய்லரை பார்த்துவிட்டு ட்வீட்டியுள்ளார் குஷ்பு.
புகழாரம்
மங்கத்தா படத்தில் அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்ததில் இருந்து அவரை ஜார்ஜ் க்ளூனி என்று பாராட்டி வருகிறார் குஷ்பு. இந்நிலையில் விஸ்வாசம் படத்தை பார்க்க அவர் பரிந்துரை செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நயன்தாரா
விஸ்வாசம் ட்ரெய்லரில் நயன்தாரா மிகவும் அழகாக இருந்தார். அவரின் அழகை புகழ்ந்த குஷ்புவுக்கு நயன் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பங்காளிகள்
என்ன பங்காளிகளா, அடிச்சிதூக்கலாமா என்று கேட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். இதற்கிடையே பொங்கலுக்கு முதலில் விஸ்வாசம் அதன் பிறகே பேட்ட படத்தை பார்ப்பேன் என்று தல ரசிகையான நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











