Khushbu: பிரபல டோலிவுட் ஹீரோவுடன் Vibe கொடுத்த குஷ்பூ.. இதுவரை பார்க்காத செம்ம க்யூட் போட்டோ!
சென்னை: கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் குஷ்பூ. அவரது லேட்டஸ்ட் ட்வீட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் குஷ்பூவின் க்யூட்டான லுக் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளது.
வைப் கொடுத்த குஷ்பூ: 1990களில் கோலிவுட்டின் கனவுக் கன்னியாக கலக்கியவர் நடிகை குஷ்பூ. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான குஷ்பூ, பின்னர் தெலுங்கில் தான் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். ஆனால், தமிழில் குஷ்பூ அறிமுகமான தர்மத்தின் தலைவன் திரைப்படம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதனால் தொடர்ந்து தமிழில் அதிக கவனம் செலுத்தினார்.

வருஷம் 16, கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்ன தம்பி என அடுத்தடுத்து குஷ்பூ நாயகியாக நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் ஒருகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதேபோல் தெலுங்கிலும் குஷ்பூவின் மர்க்கெட் உச்சத்தில் இருந்தது. நாகார்ஜுனா, வெங்கடேஷ், சிரஞ்சீவி போன்ற சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார் குஷ்பூ.
இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ், இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே அவரது பிறந்தநாளுக்கு செம்ம க்யூட்டாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் குஷ்பூ. இதுகுறித்து டிவீட் செய்துள்ள அவர், வெங்கடேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

அதில், "கடந்த 37 வருடங்களாக என் மனதில் பதிந்த படம் இது. கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக உங்களை அறிந்தவள் நான். நேற்று தான் நாம் முதன்முதலில் சந்தித்தது போல இருக்கிறது. ஆனாலும் இதுவரை நீங்கள் மாறவே இல்லை. இந்தாண்டு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். எப்போதுமே என் மீது அக்கறை கொண்ட ஒருவராக உங்களைப் பார்க்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கடேஷ், இந்தாண்டு இன்னும் சிறப்பாக அமையட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த டிவிட்டர் போஸ்ட்டில் குஷ்பூ ஷேர் செய்துள்ள போட்டோ, ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த போட்டோ என்பதால் குஷ்பூ மிக இளமையாகவும் க்யூட்டாகவும் இருக்கிறார். இதனை 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து தங்களது கனவுக் கன்னியை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











