ஒரு கப் டீயும்.. அளவில்லா சிரிப்பும்.. அண்ணாத்தைய சந்தித்த அண்ணாமலை ஹீரோயின்.. அடுத்த படத்திலும்?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து பல பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் காந்தாரா படத்தின் ஹீரோவும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி சந்தித்து சென்றார்.

முன்னதாக இயக்குநர் ஷங்கரும் அவரது மகள் அதிதி ஷங்கரும் சந்தித்தனர். அதன் பின்னர் சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் சந்தித்து சென்றனர்.

இந்நிலையில், தற்போது நடிகை குஷ்புவும் ரஜினிகாந்தை சந்தித்து அவருடன் எடுத்த சூப்பரான புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.

70 வயதிலும் படு பிஸி

70 வயதிலும் படு பிஸி

நான் யானை இல்லை.. குதிரை! விழுந்தாலும் டக்கென எந்திருச்சி ஓடுவேன் சும்மா வாய் வார்த்தைக்கெல்லாம் ரஜினிகாந்த் சொல்லவில்லை. 70 வயதை கடந்த நிலையிலும் இன்னமும் கை வசம் 2,3 படங்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து ஓய்வெடுக்காமல் உழைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் சூட்டிங் முடியும் முன்னே அடுத்து லைகாவுடன் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியை சந்திக்கும் பிரபலங்கள்

ரஜினியை சந்திக்கும் பிரபலங்கள்

படம் முடிந்தாலே இமய மலைக்கு சென்று விடுவார். மனுஷனை எங்கேயும் பார்க்க முடியாத நிலை இருந்து வந்த நிலையில், சமீப காலமாக சர்வ சாதாரணமாக சூப்பர்ஸ்டாரின் தரிசனம் அவரது ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது. மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுவது, தன்னை சந்திக்க வரும் பிரபலங்களை சந்திப்பது என சூட்டிங்கை கடந்து இது போன்ற விஷயங்களுக்கும் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

காந்தாரா இயக்குநர்

காந்தாரா இயக்குநர்

கன்னட திரைப்படமான காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. காந்தாரா படத்தை பார்த்து விட்டு சமீபத்தில் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டிய நிலையில், தலைவரை பார்த்து விடலாம் என சென்னைக்கே ரிஷப் ஷெட்டி கிளம்பி வந்து விட்டார்.

ரஜினியை சந்தித்த குஷ்பு

ரஜினியை சந்தித்த குஷ்பு

ரிஷப் ஷெட்டியை தொடர்ந்து நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு ரஜினிகாந்தை சந்தித்து எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது பதிவிட்டுள்ளார். விக்ரம் படத்தின் வெற்றி சமயத்தில் கமல்ஹாசன் உடன் போட்டோக்களை எடுத்து பதிவிட்டு இருந்த குஷ்பு வாரிசு பட சூட்டிங்கில் விஜய், பிரபு, சரத்குமார் உடன் போட்டோக்களை எடுத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் உடன் நடந்த மகிழ்ச்சியான சந்திப்பு குறித்து பதிவிட்டு இருக்கிறார்.

ஒரு டீயும் அளவில்லா சிரிப்பும்

ஒரு டீயும் அளவில்லா சிரிப்பும்

மன்னன், அண்ணாமலை, என சில படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை குஷ்பு கடைசியாக வெளியான அண்ணாத்த படத்திலும் அத்தை மகளாக நடித்து இருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தை சந்தித்த குஷ்பு ஒரு டீயும் அளவில்லா சிரிப்பும் கிடைத்தது ரொம்ப நன்றி ரஜினி சார் என பதிவிட்டுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறாரா

சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறாரா

இயக்குநர் மணிரத்னம் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ரஜினிகாந்த் குஷ்புவின் இந்த சந்திப்பை பார்த்த ரசிகர்கள் அருணாச்சலம் படத்தை இயக்கிய சுந்தர் சி இன்னொரு படத்தை இயக்கப் போகிறாரா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மீண்டும் ரஜினியுடன்

மீண்டும் ரஜினியுடன்

அண்ணாத்த படத்தில் நடித்த குஷ்பு மீண்டும் அடுத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கப் போகிறாரா அதற்காகத்தான் இந்த கேஷுவல் சந்திப்பா? என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள 2 படங்களில் ஒரு படத்திலாவது நீங்க இணைந்து நடிங்க நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X