சின்ன குஷ்புவை தொடர்ந்து பிக்பாஸ் நடிகைக்கு கண்டனம் தெரிவித்த குஷ்பு!

By Vignesh Selvaraj

மும்பை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹினாகான் எனும் நடிகை, தென்னிந்திய நடிகைகளைப் பற்றிப் பேசியதற்கு நடிகை குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழில் கமல் நடத்திவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நேரத்தில் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11-வது சீசன் தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமான ஹினாகான் தென்னிந்திய சினிமா நடிகைகளை பற்றித் தவறாகக் கூறியிருந்தார்.

ஹீரோயின்கள் குண்டாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தென்னிந்திய இயக்குனர்கள் நடிகைகளை எடை அதிகரிக்கும்படி கூறுவது வழக்கம் என ஹினா கான் கூறினார்.

குண்டாகச் சொல்கிறார்கள்

பிக்பாஸ் வீட்டுக்குள் சக ஹவுஸ்மேட்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும் நடிகை ஹினாகான், 'தென்னிந்திய ஹீரோயின்களை குண்டாக இருந்தால்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் எனச் சொல்லி, எடை அதிகரிக்கும்படி டைரக்டர்கள் கூறுவார்கள்' எனப் பேசியிருக்கிறார்.

சின்ன குஷ்பூ கோபம்

ஹினாகானின் அந்தப் பேச்சுக்கு நடிகை ஹன்சிகா திட்டியிருந்தார். தொடர்ந்து கோபம் தணியாமல் பதிலடி கொடுத்த நடிகை ஹன்சிகா 'ஹினா கான் கூறியது முற்றிலும் புல்ஷிட்' என ட்வீட் செய்திருந்தார்.

குஷ்பூ கண்டனம்

இந்த நிலையில் ஹன்சிகாவைத் தொடர்ந்து நடிகை குஷ்பு, கண்ணியமாக எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் தென்னிந்திய சினிமாவில் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என ட்விட் செய்திருக்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

அதேபோல் நடிகை காஜல் அகர்வாலிடம் ஒரு பேட்டியில் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, 'ஹினாகான் சொன்னது சரியில்லை, அவர் முதலில் தென்னிந்திய சினிமாக்களைப் பார்க்க வேண்டும், அதன்பிறகு தான் கமென்ட் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X