மண்டையில் மசாலா இருக்கா? ஜனநாயகன் காலதாமதம் குறித்து குஷ்பு பதில்!
சென்னை: எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக காலதாமதம் ஆனது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
அதில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு அனைவரும் மத்திய அரசை குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கு எப்படி மத்திய அரசை குற்றச்சாட்டாக முடியும். அப்படி என்றால் 'பராசக்தி' திரைப்படத்திற்கு தான் முதலில் மத்திய அரசு தடையிட வேண்டும், ஏன் என்றால், அந்த படத்தை ரெட் ஜெயண்ட் தயாரித்துள்ளது. அவங்க தான் நாங்கள் எதிரி, திமுகவை நாங்க எதிரியாக பார்க்கிறேன். மத்திய அரசை குறை சொல்பவர்கள் அது யாராக இருந்தாலும், கொஞ்சம் மண்டையில் இருக்கும் மசாலாவை யூஸ் பண்ண மாட்டாங்களா?

குஷ்பு பேட்டி: எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு காரணம், மத்திய அரசு காரணம் என்கிறார்கள். குழந்தை பசிக்காக என யோசிப்பதில்லை. குழந்தை அழுதாலும் அதற்கும் மத்திய அரசுதான் காரணம் என சொல்கிறவர்களை என்னவென்று சொல்வது. நான் ஒரு நடிகையாக மட்டுமில்லை, ஒரு தயாரிப்பாளராகவும் தான் பேசுகிறேன். தணிக்கை குழுவுக்கு என்று தனி ரூல் இருக்கிறது. படத்தினுடைய அனைத்து சான்றிதழ்களும் கையில் கிடைத்த பிறகுதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். இதுதான் ரூல்ஸ். எந்த தயாரிப்பாளரும் இந்த விதிமுறையை பின்பற்றுவதே இல்லை. படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில், எங்களுக்கு தணிக்கை குழு சான்றிதழ் வரவில்லை. அதற்கு இதுதான் காரணம், அதுதான் காரணம் என பல காரணங்களை கூறி வருகிறார்கள்.
விடுமுறை தினம்: இதற்கு நடிகரின் மேல் தவறு என்று நான் சொல்ல மாட்டேன், இந்த தவறுக்கு காரணம் ஒரு தயாரிப்பாளர் தான். நானும் ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில் சொல்கிறேன். எந்த படமாக இருந்தாலும், யார் படமாக இருந்தாலும் தணிக்கை குழு சான்றிதழின் வந்த பிறகுதான் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். ஏன் அதை செய்யவில்லை என தெரியவில்லை. அப்படி இருக்கும் போது தணிக்கை குழு மீது குற்றம் சாட்ட முடியாது. கிறிஸ்துமஸ், நியூ இயர் என அடுத்தடுத்து பண்டிகை இருந்தது. அனைத்துமே அரசு விடுமுறையாக இருக்கும்போது, 24 மணி நேரமும் அனைவரும் வேலையை விட்டு விட்டு உங்களுக்காக வந்து வேலையை பார்க்க முடியுமா?
எனக்கும் வருத்தம் தான்: ஜனநாயகம் படம் வெளியாகவில்லை என்கிற வருத்தம் ரசிகையாக எனக்கும் இருக்கிறது. என்னுடைய மகளும் விஜய் ரசிகை என்பது அனைவருக்கும தெரியும். அந்த படம் வெளியாகத்தது எனக்கும் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால், ரூல்ஸ் ஆர் ரூல்ஸ் முதலில் அந்த ரூல்சை பாலோ செய்ய வேண்டும். அதை நாம் பின்தொடர்ந்தால் இந்த பிரச்சனைகள் வராது என்று குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











