நாம தான் பெஸ்ட் ஜோடி...சுந்தர்.சி உடன் 26 ஆண்டுகள்...காதல் நினைவுகளை பகிர்ந்த குஷ்பு

சென்னை : எல்லோருக்கும் காதலர் தினம் பிப்ரவரி 14 என்றால், குஷ்பு - சுந்தர்.சி ஜோடிக்கு பிப்ரவரி 8 ம் தேதி. அன்ற தான் சுந்தர்.சி, தனது காதலை குஷ்புவிடம் தெரிவித்த நாள்.

Khushbu reminisces the day Sundar C proposed to her

சுந்தர்.சி தனது காதலை சொன்னதன் 26 வது ஆண்டை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 போட்டோக்களை குஷ்பு பதிவிட்டுள்ளார். ஒன்று சமீபத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட செல்பி. மற்றொன்று, இருவரும் இணைந்து பணியாற்றிய போது எடுத்த பழைய படம்.

Khushbu reminisces the day Sundar C proposed to her

அந்த போட்டோவுடன் குஷ்பு, நீங்கள் என்னிடம் காதலை சொல்லி 26 ஆண்டுகள் ஆகி விட்டது. எது உங்களுக்கு உடனடியாக ஓகே சொல்ல வைத்தது என தெரியவில்லை. அப்போது நீங்கள் எடுத்த துணிச்சலான முடிவு சிறப்பானது. அது என்னை சந்தோஷப்படுத்தி உள்ளது.நீங்கள் எனது அன்பை முழமையாக்கி விட்டீர்கள். மகிழ்ச்சியாக 26 வது ஆண்டு என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில, உங்களுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேட் வார் ஈச் அதர். மகிழ்ச்சியாக காதலை சொன்ன தினம் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோக்களை குஷ்பு பதிவிட்டதும் அவரது ரசிகர்கள், அவரை பின்தொடர்பவர்கள், திரை துறையை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை கூற துவங்கி விட்டனர்.குஷ்பு - சுந்தர்.சி ஜோடி 2000 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

குஷ்பு தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X