9 வருஷமாச்சு, அப்போ அண்ணன் சிரஞ்சீவி, இப்போ தம்பி பவன் கல்யாண்- குஷ்பு ஹேப்பி
சென்னை: 9 ஆண்டுகள் கழித்து குஷ்பு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.
குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். அரசியலில் பிசியான பிறகு படங்களில் அவர் கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து அவர் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.
தெலுங்கு
மேலும் ஒரு நற்செய்தி...9 ஆண்டுகள் கழித்து நான் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். திரிவிக்ரம், பவன் கல்யாணின் படத்தில் நடிக்கிறேன் என குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திரிவிக்ரம்
திரிவிக்ரம் அருமையான திரைக்கதையை எழுதியுள்ளார். எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். என் கடைசி தெலுங்கு படம் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன். தற்போது அவரது சகோதரருடன்... என தெரிவித்துள்ளார் குஷ்பு.
படம்
படத்தில் நடிக்கும் முடிவை எடுக்க பல காலம் எடுத்துக் கொண்டேன். தெலுங்கில் 9 ஆண்டுகளும், தமிழில் 7 ஆண்டுகளும் ஆனது...ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத வகையில் நடிப்பேன் என நினைக்கிறேன் என்கிறார் குஷ்பு.

நிஜங்கள்
குஷ்பு சன் டிவியில் தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











