சத்யராஜ் பற்றிய ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
சென்னை: சத்யராஜுக்கு ஜோடியாக அதிக படங்களில் நான் தான் நடித்துள்ளேன் என்று நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தை பார்த்தவர்கள் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டார்கள். அந்த கேள்விக்கு கடந்த 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படத்தில் பதில் கிடைத்துவிட்டது.

கர்நாடகாவில் படத்திற்கு இருந்த பிரச்சனை சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால் தீர்ந்தது. இதனால் பாகுபலியை கட்டப்பா காப்பாற்றியதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறயிருப்பதாவது,
சத்யராஜ் சார் போன்று வேறு யாராலும் கட்டப்பாவாக சிறப்பாக நடித்திருக்க முடியாது..மற்றும் ஒரு ரகசியம், அவருக்கு ஜோடியாக நான் தான் அதிக படங்களில் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications