விறுவிறுப்படையும் அண்ணாத்த வேலைகள்...விரைவில் படப்பிடிப்பில் குஷ்பு
சென்னை : அண்ணாத்த படத்தில் தான் நடிக்க வேண்டிய பகுதிகளை ரஜினி ஏற்கனவே நடித்து முடித்து விட்டார். ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து மே மாதம் சென்னை திரும்பினார்.
பல பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்தும் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு ஐதராபாத்தில் மீண்டும் துவக்கப்பட்ட படப்பிடிப்பு மே மாத துவக்கத்தில் நிறைவடைந்தது.

போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள்
தற்போது அண்ணாத்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை எடுத்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பில் குஷ்பு
இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விரைவில் குஷ்பு தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடிக்கும் பணியை துவக்க போகிறாராம். குஷ்பு தேர்தலில் போட்டியிட்டதால் இதுவரை அரசியல் பணிகளில் பிஸியாக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை முழுவதுமாக முடிக்கவில்லையாம்.
Recommended Video

லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு
தமிழக அரசு லாக்டவுன் தளர்வுகளை மேலும் அதிகரித்து, படப்பிடிப்புக்கள் நடத்த அனுமதி அளித்த பிறகே குஷ்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். விரைவில் படப்பிடிப்பை துவங்குவோம் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிரபலங்களின் தொகுப்பாய் அண்ணாத்த
சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படம் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட பொழுதுபோக்கு கதையாக உருவாக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கோலிவுட்டின் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











